English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Marvellous
a. அற்வுதமான, திகைக்கச் செய்கிற, நம்ப முடியாத.
Marxian, n.
செர்மன் சமவுடைமைவாதியான காரல் மார்க்ஸின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர், (பெயரடை) காரல் மார்க்ஸ் கொள்கைகள் சார்ந்த.
Maryrize
v. உயர்ந்த குறிக்கோளுக்காக உயிர்த்தியாகம் செய்வி, கொண்ட கொள்கைக்காக, துன்பம் மேற்கொள்ளுவி.
Mas;ticate
v. மெல்லு, அதுக்கு, பல்லினால் அரை.
Mascara
n. கண்ணிமை மயிர்களுக்குச் சாயம் ஊட்டுவதற்கான கலவை மருந்து.
Mascot
n. தாயத்து, அதிர்ஷ்டம் உண்டுபண்ணும் பொருள். நற்பேறு கொணர்விப்பதற்காகக் கருதப்படும் ஆள்.
Masculihne
n. ஆண்பால், ஆண்பாற்சொல், (பெயரடை) அண்பாலுக்குரிய, (இலக்) ஆண்களின் பெயர்களுக்குரிய பால் சார்ந்த, வீறுமிக்க, ஆண்மைவாய்ந்த, ஊக்கமுடைய, பெண் வகையில் ஆணியல்புகள் வாய்ந்த, ஆண்மாரியான.
Mash
n. கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு, குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை, மசியல், குழப்பமான கதம்பும், (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல, மசியலாக்கு, உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Masher
n. சிறு பேதைப் பெண்களின் கருத்தைக் கவர்வதாக எண்ணிப் பகட்டான உடை உடுத்தும் பிலுக்கள்.
Mashie
n. குழிப்பந்தாட்ட வகையில் பந்தினை மிக உயர அல்லது இடைப்பட்ட தொலைவுகளுக்குத் தூக்கியடிப்பதற்கான இருப்புக்கோல்.
Mash-tub
n. அரைத்தமா கூழாக்கப்படும் தொட்டி.
Masjid
n. (அரபு) பள்ளிவாசல்.
Mask
n. முகமூடி, முகத்திரை, முகக்காப்புள வலை, பண்டைய கிரேக்க, ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை, பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம், மாறுவேடம், உருமாற்றம், முகமூடியணிந்தவர், நரிமுகம், நாதித்தலை, (வினை) முகமூடி கவி, முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை, பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை, நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு, உருமாறு, உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள்.
Masker
n. முகமூடி அணிந்திருப்பவர், முகமூடி நடனக் குழுவினர்.
Maskinonge
n. வட அமெரிக்க பெரிய ஏரிகளிற் காணப்படும் பெருமீன் வகை.
Masochism
n. அடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை, அஞரின்பம்.
Mason
n. கொற்றன், கொல்லத்துக்காரன், கல்தச்சன், சிற்பி, நற்கொற்றர், உடன்பிறப்புணர்ச்சியுடன் ஒருவர்க்கொருவர் உதவிசெய்துகொள்ளும் கேண்மைக்கழக உறுப்பினர், (வினை) கட்டுமான வேலை செய், கொல்லத்து வேலை செய், கல்தச்சு வேலைப்பாட்டினால் வலுப்படுத்து.
Masonic
a. நற்கொற்றர் கேண்மைக்கழக முறை சார்ந்த.
Masonry
n. கட்டுமான வேலை, கொல்லத்துவேலை, கல்தச்சு வேலைப்பாடு.
Masora, Masorah
விவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளின் தொகுப்பு.