English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Match-board
n. ஒட்டடிணை பலகை, ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல்.
Matchet
n. வெட்டுக்கத்தி, வெட்டு கருவியாகவும் வெட்டுபடையாகவும் பயன்படுத்தப்படும் அகல் அலகுக்கத்தி.
Matchless
a. ஆடில்லாத, இணையற்ற.
Matchlock
n. பழங்காலத் துப்பாக்கி வகை.
Matchmaker
n. மண இணைப்பாளர், திருமணங்களை முடித்து வைப்பதில் ஈடுபட்டுழைப்பவர்.
Match-point, match-points
n. கெலிப்பணிமை நிலை, ஆட்டத்தில் ஒருபக்கத்து வெற்றிக்கு ஒரு கெலிப்பெண்ணை வேண்டியிருக்கும் நிலை.
Matchwood
n. தீக்குச்சிகள் செய்தற்குரிய கட்டை, எளிதில் தீப்பற்றும் செத்தை, சிராய், சிம்பு.
Mate
-1 n. தொழிலாளர்களுக்கிடையில் தோழன், கூட்டாளி, உடன் வேலைசெய்பவர், இணைதுணைகளில் ஒன்று, துணைவன் அல்லது துணைவி, (கப்,) வணிகக்கப்பலில் துணைத் தலைவர், பணித்துணைவர், (வினை) மண உறவில்இணைத்து வை, மணஞ் செய்துகொள், பறவை முதலியவற்றின் வகையில் இணைகூட்டி, கூடி இணைவுறு,
Mate
-2 n. சதுரங்கக்காய் அடைப்பு, திக்குமுக்காட்ட நிலை, (வினை) திக்குமுக்காடவை, தடுத்து நிறுத்து, தோல்வியுறச் செய்.
Mate
-3 n. நறுங் குடிவகைக்குதவும் தேயிலைபோன்ற தென் அமெரிக்க புதர்ச்செடி வகை, புதர்ச்செ0வகை இலையின் வடிநீர் ஊறல், வடிநீர் ஊறல் கலம்.
Matelote
n. வெங்காயம் வதக்கியமீன் முதலியவற்றுடன் கலந்து தேறல் குழம்பு.
Materia medica
n. மருந்துச்சரக்குகள், மருந்துச் சரக்குகளின் ரெதாகுப்பேடு, மருந்துச்சரக்காய்வுநுல்.
Material
n. மூலப்பொருள், மூலக்கூறு, வரலாற்றுப் பொருட்கூறு, சானம், மூலம், கலைமூல முதல், தனிப்பொருட்கூற, ஆக்கப்பொருட் கூறு, பொருள் வகை, பொருள் திறம், (பெயரடை) பருப்பொருள் சார்ந்த, உடல் சார்ந்த, வாதப்பொருளுக்ககுரிய, ஆன்மத்துறை சாராத, முக்கியமான, சாரமான.
Materialism
n. இயற்பொருள் வாதம, உலோகாயதம், கலைத் துறையில் பொருண்மைக் கூற்றையே வலியுறுத்தும் பாங்கு.
Materialize
v. பருப்பொருளாகு, பிழம்புருவாக்கு, பிழம் புருவாகக்காட்டு, ஆவி வகையில் கண்ணுக்குப் புலப்படத் தோன்று, மெய்யாகு, உருப்படு, உருப்படியாகு, உலோகாயதப் பண்பூட்டு.
Materially
adv. அடிப்படையிலேயே, மூலப்பொருள் வகையிலேயே, முக்கியமான அளவிற்கு, உருப்படியாகு, கணிசமான அளவில், குறிப்பிடத்தக்க அளவில், பெருமளவில்.
Materiel
n. துறைக்கலங்கள், பணித்துறைத் துணைச்சாதனத் தொகுதி.
Maternal
a. தாய்சார்ந்த, தாய்குரிய, தாய்போன்ற, தாய்போன்ற பாமுடைய, தாய்வழி உறவுடைய.