English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Maternity
n. தாய்மை, தாயின் இயல்பு, தாய்ச்சி நிலை, பிடிள்ளைப்பேற்று நிலை.
Mater-of-course
a. இயல்பான முறையில் எதிர்பார்க்கக் கூடியதான.
Matey
a. பழகுந்தன்மையுள்ள, பழக்கப்பட்ட.
Mathematical
a. கணக்கியல் சார்ந்த, கணக்குத் தவறாத சரிநுட்பமான.
Mathematician, n.
எண்ணர், கணக்கியலார்.
Mathematics
n. கணக்கியல்.
Matico,
(ஸ்பா) பெருவிய புதர்ச்செடி வகை, குருதிப் போக்கினை நிறுத்துகிற மருந்தாகப் பயன்படுத்தப்படும் பெருவிய புதர்செடி வகையின் இலைகள்.
Matin
n. (செய்) பறவைகளின் வைகறைப்பாட்டு.
Matinee
n. நாடகப் படத்துறைகளில் பிற்பகலர் காட்சி, பிற்பகல் இசையரங்கு.
Matins,n. pl.
காலை வழிபாடு, காலை வணக்கம, (செய்.) பறவைகளின் புலரிப்பாட்டு.
Matrass
n. வடிகலக் குவளை, முட்டை வடிவான நீள்கழுத்துடைய கண்ணாடி வாலைவடிகலம்.
Matriarchy
n. தாய் குடும்பத்தலைவியாகவுள்ள சமுதாய அமைப்பு, தாய்வழியாட்சி முறை.
Matricide
n. தாய்க்கொலை, தாய்க்கொலை செய்பவர்.
Matriculate
n. பல்கலைக்கழக நுழைவுரிமை பெற்றவர், (வினை) பல்கலைக்கழக நுழைவு பெறுவி, பல்கலைக்கழக நுழைவு பெறு.
Matriculation
n. நுழைவுரிமையுரிமை யளிப்பு, பல்கலைக்கழக உரிமைகள் பெறச்செய்தல், பல்கலைக்கழக நுழைவுரிமைப் பேறு, பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு.
Matrimonial
a. திருமணஞ் சார்ந்த, திருமணத்துக்குரிய, திருமணமூலமாகக்கிடைத்த.
Matrimony
n. திருமண வினை, திடிருமணமான நிலை, சீட்டாட்ட வகை, சீட்டாட்ட வகைகளில் துருப்பு அரசன்-அரசி இணைவு.
Matrix
n. கருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.
Mattamore
n. அடிநிலக்கிடங்கு, கீழ்நில மனை.