English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ness
n. நிலக்கோடு, நிலமுனை, நிலக்கூம்பு.
Nest
n. கூடு, பறவை தங்கி வாழுமிடம், புழுப்பூச்சிக்கூடு, விலங்கின் உறைவிடம், உறையுள், வீடு, ஒதுக்கிடம், தனிவாழ்விடம், தனிக்காப்பிடம், இன்ப வாய்ப்பிடம், இனப் பெருக்கிடம், பேணிடம், திருல்ர் சேம இடம், தீமை தழைப் பிடம், மொய்திரள், இனக்குழு, தொகுதி, திரட்டு, இழுப்பறைத் தொகுதி, (வினை.) கூடுகட்டி வாழ், கூடுகட்டு, கூடமைப்பில் ஈடுபடு, கூட்டைப்பறித்தெடு, கூட்டில் அமைத்துவை, செறித்துவை, ஒன்றுக்குள் ஒன்றாகப் புகுத்தி வை.
Nest-egg
n. தூண்டு முட்டை, பெட்டைக் கோழி முட்டையிடும்படி தூண்டுவதற்காக வைத்த முட்டை அல்லது முட்டைப்போலி, சேம ஒவக்கீட்டுத் தொகை, சேமிப்புத் தொகைக் கருமூலம்.
Nestle
v. மிடைந்திரு, மொய்த்திரு, ஒட்டி அணைந்திரு, தழுவியிரு, வாய்ப்பாக அமர்ந்துகொள், பாதி உடல் புதைவாகக் குழைத்தமர்ந்து கொள், பேணி அணை, அணைவாக நெருக்கு, அமர்விடம் அளி.
Nestling
n. புனிற்றிளங்குஞ்சு, கூட்டைவிட்டு நீங்க இயலாத இளங்குஞ்சு.
Nestor
n. அறிவுமிக்க முதியவர், குழுவில் மூத்தவர்.
Nestorian
n. இயேசுநாதர் தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் வெவ்வேறாகக் கொண்டிருந்தவர் என்ற முற்காலக் கான்ஸ்டாண்டினோப்பிள் சமய முதல்வர் நெஸ்டாரியஸ் (கி.பி.42க்ஷ்) என்பாரின் கோட்பாட்டாளர், (பெ.) நெஸ்டாரியஸ் என்பாருக்குரிய, நெஸ்டாரியஸ் என்பாரின் கொள்கை சார்ந்த, இயேசுநாதர் தெய்விகத் தன்மையும் மனிதத் தன்மையும் உடைய இருவேறு இயல்புடையவர் என்ற கோட்பாட்டைச் சார்ந்த.
Net
-1 n. வலை, மீன்வலை, பழமுதலியன வைக்கும் வலைப்பை, பந்தாட்ட வலை, சூழ்ச்சி, சிலந்திக்கூடு, வலைபோன்ற அமைப்பு, வலைப்பின்னல் வேலை, (வினை.) வலையால் மூடு, வலையிட்டுப்பிடி, வலையலடை, மீன்பிடி, ஆற்றில் வலை வீசு, வலைப்பின்னல் வேலை செய், பை-படுக்கை முதலியவற்றை வலைப்பின
Net
-2 n. கழிவு நீங்கிய, கழிவுபோக எஞ்சியுள்ள, நகர, தேவையான குறைப்புக்கள் போக மிகுதியாக நிற்கின்ற, (வினை.) நிகர ஆதாயமாகப் பெறு, நிகர வருவாயாகப் பயனளி.
Netball
n. வலைக்கூட்டுப் பந்தாட்டம், மேல்கட்டிய வலைத் தொங்கலுடைய வளையத்தினூடாகப் பந்துவிழும்படி ஆரம் பெண்டிர் பந்தாட்ட வகை.
Nether
a. கீழே உள்ள, அடியிலுள்ள, உள்ளான, நிலவுலகுக்குக் கீழே உள்ள.
Netherlander
n. நெதர்லாந்து நாட்டவர்.
Netherlandish
a. நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த.
Netsuke
n. குமிழணி, ஜப்பானியர் அணியும் மெருகிடப்பட்ட குமிழ்மாட்டி போன்ற அணிகலன்.
Netting
n. வலையிடல், வலை, வலைக்குரிய இழை, வலைப்பின்னலுக்கான கச்சை, வலையழிக்கான கம்பி, கம்பியாலான வலை, கம்பி வலைப்பகுதி.
Nettle
n. பூனைக்காஞ்சொறிச் செடி வகை, (வினை.) முட்செடிகளால் அடி, காஞ்சொறிமுத்துப் போலக் குத்து, எரிச்சலுண்டாக்கு, சினமூட்டு, தொந்தரவு செய்.
Nettle-rash
n. காஞ்சொறிமுத்துக்களால் ஏற்படும் தடிப்புச் சொறி வேதனை.
Network
n. பின்னல் வேலை, பின்னல், வலையமைவு, குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு, ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு, இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை.
Neum
n. (இசை.) அசை ஒலிப்பு இசைப்புக்குறி, இடைநிலைக்கால இசைமானத்தில் சுரத்தொனி ஏற்ற இறக்கக் குறி.
Neural
a. நரம்புகள் சார்ந்த, நரம்புமைய அமைப்பைச் சார்ந்த.