English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Neptune
n. கிரேக்கபுராண மரபில் கடல் தெய்வம், சேண்மம், கதிரவனைச் சுற்றி ஓரம் எட்டாவதுகோள்.
Neptunian
n. பாறைகள் சிலவற்றின் நீர்வழித் தோற்றக் கோட்பாடுடையவர், (பெ.) (மண்.) நீரின் செயலால் தோன்றுகிற.
Neptunium
n. சேணியம், விண்ணிய அணுக்கள் நொதுமங்களை ஏற்றுச் சேணாயம் ஆகும்போது ஏற்படும் நிலையற்ற இடைமாற்ற நிலைத் தனிமம்.
Nereid
n. கடலணங்கு, (வில.) நீண்ட கடற்புழு, கடற் பூரான்.
Nero antico
n. பண்டை ரோமப் பேரரசின் பாழடைந்த கட்டிடங்களில் காணப்படும் கருஞ்சலவைக்கல்.
Neroli
n. நறுமவ்ப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்படும் செம்மஞ்கள் மஷ்ர்த் தைலம்.
Neronian
a. ரோமப் பேரரசன் நீரோவைச் சார்ந்த, பேரரசன் நீரோ காலத்துக்குரிய, கொடுங்கோன்மை வாய்ந்த, கொடிய, இரக்கமற்ற, ஆணவமான, மனம் போன போக்குடைய, வரம்பு கடந்த.
Nervate
a. (தாவ.) இலை வகையில் நரம்புகளுள்ள.
Nervation, nervature
இலைநரம்பு அமைதி.
Nerve
n. நரம்பு, தளை, தசைக்கட்டு, (உள்.) உணர்ச்சி நாளம், மூளையிலிருந்து உடலுறுப்புப் பகுதிகளுக்குத் தூண்டுதல் அலையதிர்வுகளைக் கொண்டுசெல்லும் தசைநாண், வில்நாண், நரம்பின் நாரியல் இழைமம், (தாவ.) இலை நரம்பு, நடுநரம்பு, முறுக்கேறிய நிலை, ஊக்கம், ஆற்றல், மனவுறுதி, இடரிடை உலையா மன அமைதி, மனத்திட்பம், துணிவு, தளராத்தன்னம்பிக்கை, (பே-வ.) துணிச்சல், திண்ணக்கம், துடுக்குத்தனம், (வினை.) வலிவூட்டு, ஊக்கமளி, உரமூட்டு, இல்ர் எதிரே முழுவலிமையும் திரட்டி ஒருங்குவி.
Nerve-centre
n. நரம்பு மையம்.
Nerve-knot
n. நரம்புத்திரள்.
Nerveless
a. வலிமையற்ற, உரமற்ற, கிளர்ச்சியற்ற, செயலற்ற, நரம்பில்லாத.
Nerves
n.pl. நரம்புணர்வுநிலை, அளவு மீறிய கூருணர்ச்சி நிலை, நரம்புக் கோளாறுநிலை, எளிதில் கிளர்ச்சியூட்டப் படும் நிலை, உணர்ச்சித் துடிப்பு.
Nervine
n. நரம்பூக்க மருந்து, நரம்புக் கோளாறு தணிவிக்கும் மருந்துப் பொருள் (பெ.) நரம்புத் தளர்ச்சியைத் தணிவிக்கிற, நரம்புக்கோளாறுகளைப் போக்குகிற.
Nervous
a. தசைப்பற்றுள்ள, தசைக்கட்டு நிரம்பிய, வலிமை பொருந்திய, இலக்கியநடை வகையில் உரமிக்க, பொருட்செறிபான, சொற் சுருக்கமிக்க, நரம்பு சார்ந்த, நரம்புகள் நிறைந்த, நரம்புணர்வைப் பாதிக்கிற, மென்மையான நரம்புகளையுடைய, நுட்பக்கூருணர்வுடைய, தொட்டால் சிணுங்குகிற, நரம்புக் கோளாறுடைய, எளிதில் சினங்கொள்கிற, எளிதில் மனக்கிளர்ச்சிகொள்கிற, எளிதில் அமைதியிழக்கிற, அஞ்சி நடுங்குகிற, கோழைத்தனமுடைய, துணிவில்லாத, மனவுரமற்ற, கூச்சப்படுகிற.
Nervure
n. பூச்சி சிறகின் நரம்புச்சட்டம் இலைநரம்பு, இலையின் தலைநரம்பு.
Nervy
a. (செய்.) வலிமையுடைய, தசைப்பிடிப்புடைய.
Nescient
n. அறிவின்மைக் கோட்பாட்டாளர், கடவுளையோ இயற்கை கடந்த எவாவாற்றலையோ அறிய இயலாதென்னும் கோட்பாடு உடையவர், (பெ.) அறியாமையுள்ள, கடவுள் பற்றிய கருத்தற்ற, ஐயறவுக் கோட்பாடுடைய.