English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Negroland
n. நீகிரோவர் நிலம், ஆப்பிரிக்காவில் நீகிரோவர்கள் குடியிருக்கும் நிலப்பகுதி.
Negus
-1 n. அபிசீனியாவின் அரசர்.
Negus
-2 n. இன்தேறலும் நீரும் கலந்த வெப்பமான இனிப்புப் பானம்.
Neigh
n. குதிரைபோலக் கனை.
Neighbour
n. அயலவர், அருகிலுள்ளவர், அக்கம் பக்கத்திலுள்ளவர், அண்டை வீட்டார், அடுத்திருப்பவர், அடுத்த தெருவினர், பக்க ஊரினர், அண்டை நாட்டினர், அருகிலுள்ளது, அணிமையிலுள்ள பொருள், நட்புணர்ச்சியுடையவர், பாசமுடையவர், பாசத்துக்குரியவர், (வினை.) அடுத்திரு, எல்லையடுத்திரு, ஒரே எல்லைக் கொண்டிரு, அணித்தாயிரு, கிட்டத்தட்ட சென்றெட்டியதாயிரு.
Neighboured
a. அண்டையயலாராகக் கொண்ட, அருகாகக் கொண்ட, சுற்றுச் சூழ்நிலையாகக் கொண்ட.
Neighbourhood
n. அருகிடம், சுற்றுப்புறம், சூழ்வட்டாரம், அணிமை, அருகிலுள்ள தன்மை, அணுக்க அளவு, அணிமை ஒப்புமை, அணிமை இணக்க உணர்ச்சி, அணிமைப்பாகம்.
Neither
pron இரண்டும் அற்றது, இதுவும் அதுவும் அல்லாதது, குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாதது, (பெ.) இரண்டுமற்ற, இதுவும் அதுவும் அல்லாத, குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாத, (வினையடை.) இரண்டும் இல்லாததாக, ஒன்றிலும் சாராததாக, அல்லது இதுவோவெனில் அதுதானும் இல்லை.
Nek
n. தென் ஆப்பிரிக்க மலைத்தொடரில் இடைப்பள்ளம்.
Nekton
n. பெருங்கடலிலும் ஏரியிலும் நீந்தி வாழம் உயிரினத் தொகுதி.
Nelly
n. வெண்மையும் கருமையுமான நீண்ட இறகுத் தொகுதியுடைய மிகப் பெரிய கடற்பறவை வகை.
Nematocyst
n. இழுதுமீன் முதலியவற்றில் கொடுக்காக இயக்கத்தக்க சு இழை அடங்கிய நுண்மக்கூறு.
Nematode
n. நீண்டுருண்ட வடிவுடைய புழுவகை, (பெ.) நீளுருள் வடிவுடைய.
Nemesis
n. பழித்தெய்வம், சூழ்வினை ஆற்றல், கலை இலக்கியத் துறையில் இயல்பான அறமுறைப் பழிவிளைவு.
Nemine contradicente
adv. யார் மறுப்புமின்றி, எதிர்வாக்கில்லாமல், ஒருமுகமாக.
Nenuphar
n. அல்லி மலர்வகை.
Neo-cambrian
a. (மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த.
Neodoxy
n. புதிய கோட்பாடு, புதிய கொள்கை.
Neo-hellenism
n. கிரேக்க கொள்கை குறிக்கோள்களின் மறுமலர்ச்சிப் பண்பு.
Neolithic
a. புதிய கற்காலத்தைச் சார்ந்த, பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த.