English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nectarine
n. கண்ணிறுக்கமான சதைப் பற்றுடைய பேரியினக் கனிவகை.
Nectary
n. மலரின் தேன் தடம்.
Need
n. தேவை, தேவைக்கூறு, தேவைப்படுநிலை, வேண்டிய பொருள், துணையற்ற நிலை, இடர்நிலை, நெருக்கடி நிலை, இல்லாக்குறை, இலம்பாடு, வறுமை, (வினை.) தேவையுறு, வேண்டிநாடு, தேவைப்படு, தேவையுணர், குறைபாடுறு, குறைபாடு உணர், கடப்பாடு கொண்டிரு, இன்றியமையாநிலையுறு, வேண்டியதாகு.
Needfire
n. உராய் நெருப்பு, உலர்ந்த கட்டை உராய்தலினால் ஏற்படுந் தீ.
Needful
a. தேவைப்படுகிற, இன்றியமையாத, அவசியமான.
Needle
n. ஊசி, ஊசி வடிவ மணியுருப் படிவம், குளிர் மண்டல மர வகைகளின் ஊசி வடிவ இலை, கூர் முட்கருவி, காந்த முள், காந்த ஊசி, பொன் உரையாணி, கூரறுலைக் கருவி, கூரலகுடைய செதுக்கு கத்தி, தோலடிப் பீற்றுக் குரிய குத்து மருந்தூசி, இசைத்தட்டு முள், துப்பாக்கி, பீரங்கிகளின் குண்டுறை வெடிக்க வைக்கும் வெடியூசி, தூபி, கோரி. ஊசிக்கோபுரம், கூர்முனைக் கொடும்பாறை, நீள் கொடுமுடி, கூர்ஞ்சிமையம், (க-க.) தற்கால உதைகால், குத்தல் உணர்ச்சி, தொல்லை, (வினை.) ஊசியால் தை, குத்து, துளை, ஊடுருவு, ஊடுருவிச் செல், ஊடாகப் புகுந்து செல், புகுந்து வழிசெய், உத்தர உதைகால் கொடு, ஊசியுரு மணிப்படிவமாகு, ஊசிப்படிவமாயமை, குத்திக்கிளறு, எரிச்சலூட்டு, தொல்லைக்கொடு, அலைக்கழி, செயலுக்குத் தூண்டு.
Needle-bath
n. ஊசித்தாரைக் குளிப்பறை.
Needle-book
n. புத்தக வடிவ ஊசிப்பெட்டி.
Needle-fish
n. மூரல் மீன், ஊசி போன்ற வடிவுடைய மீன்.
Needleful
n. ஊசியில் ஒரு தடவையில் நோக்கக்கூடிய நூலின் அளவு, ஊசிக் கோப்பளவு நூல்.
Needle-gun
n. ஊசியின் தாக்குதலால் தோட்டா வெடிக்கும் துப்பாக்கி வகை.
Needle-lace
n. ஊசிப் பின்னல்வேலை.
Needle-point
n. கூர்முனை, ஊசிப் பின்னல் வேலை.
Needless
a. தேவையற்ற, வேண்டாத.
Needlewoman
n. தையல் மாது, தையல் பயிற்சித் திறமுடைய பெண்.
Needlework
n. தையல் வேலை.
Needments
n.pl. தேவைப்பொருள்கள், பயணத் துணைப்பொருள்கள்.
Needs
-1 n.pl. இயற்கைத் தேவைகள், இயற்கை வாய்ப்புதவிகள்.
Needs
-2 adv. இன்றியமையாத நிலையில், கட்டாயமாக.