English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Neckcloth
n. கழுத்துக்குட்டை, ஆடவர் கழுத்தைச் சுற்றி அணியும் துகிற்பட்டி.
Neckerchief
n. கழுத்தைச் சுற்றி அணியுங் குட்டை.
Necking
n. (க-க.) எருத்தம், தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி.
Necklace
n. ஆரம், கழுத்து மாலை, பதக்கம், கண்டசரம்.
Necklet
n. கழுத்து அணி, கம்பளிப் பட்டிகை.
Necktie
n. கழுத்துக்கச்சு, கழுத்துப் பட்டையைச் சுற்றி அணியப்படும் சுருக்கு.
Neck-verse
n. தலை காக்கும் பாடல், திருச்சபைக் காப்புரிமையுடையவர் கொலைத் தண்டணையிலிருந்து தவிர்ப்புப் பெற வாசிக்கப்படும் விவிலியப் பாடல் வாசகம்.
Necrobiosis
n. உடலின் தசை அழுகல்.
Necrogenic
a. இறந்த உடலினின்று தோன்றிய.
Necrolatry
n. இறந்தவர் வழிபாடு, இறந்தவர் பற்றிய மதிப்பு, பிண வழிபாடு, பிணத்துக்குக் காட்டப்படும் மதிப்பு.
Necrology
n. இறந்தவர் பெயர்ப்பட்டி.
Necromancer
n. ஆவியுலகப் பேச்சாளர், மாய வித்தையாளர்.
Necromancy
n. ஆவிகள் தொடர்பால் வருவதுரைத்தல், மாயவித்தை, மாந்திரிகம்.
Necrophagous
a. பிணந் தின்னுகிற.
Necrophore
n. இறந்தவற்றைப் புதைத்து மூடிவைக்கும் வண்டுவகை.
Necropsy
n. பிணத்தேர்வாய்வு, இறந்த பிறகு செய்யும் உடல் ஆய்வு.
Necrosis
n. உடற்பகுதி இழைம அழுகல், எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல்.
Nectar
n. அமிழ்தம், சாவா மருந்து, இன்சுவைப்பானம், தேன், வளியூட்டப்பட்ட பான வகை.