English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Neer-do-well, neer-do-well
n. உதவாக்கரை, ஒன்றுக்கும் பயனற்ற ஆள்.
Nefarious
a. கொடிய, இழிந்த, பழியார்ந்த, வெறுக்கத்தக்க.
Negate
v. மறு, இல்லையென்று கூறு, இல்லாததாக்கு.
Negation
n. மறுத்தல், மறுப்பு, மறுப்புரை, மறுப்புச் செய்தி, மறுப்புக் கோட்பாடு, எதிர்மறை, அன்மை, இன்மை, இல்பொருள், மறுதலை மெய்ம்மை, மெய்யல்லாதது.
Negationist
n. அழிவுவாதி, வெற்று மறுப்புவாதி, தனக்கென ஆக்கக் கருத்தாக எதுவுமின்றி ஒப்புக் கொள்ளப்பட்ட எல்லாப் பொதுக் கருத்துக்களையும் முற்றிலும் மறுப்பவர்.
Negative
n. எதிர்மறை, எதிர்மறைப் பண்பு, அன்மை, இன்மைக் கூறு, மறுப்புரை, எதிர்மறை வாசகம், மறுப்பெதிர் மொழி, மறிநிலை எண், எதிர்மறையான அளவை, நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு, மின்கலத்தில் எதிர்மின் தகடு, (பெ.) எதிர்மறையான, மறுப்பான, மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற, தடையான, தடையறிவிக்கிற, வாக்குச் சீட்டு வகையில் எதிரான, அல்லாத, எதிர் பண்பு வாய்ந்த, எதிர் இயல்புடைய, இன்மைக் கூறு தெரிவிக்கிற, எதிர்மறைக் கூறான, எதிர்மறைச் சார்பான, எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட, நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான, எதிர்மின் சார்ந்த, ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த, (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற, மெய் விலக்குகிற, (கண.) மறுதலையான, கழித்துக் காண வேண்டிய, இழப்புக் குறித்த, (வினை.) மறுந்துரை, மறு, தவறென்று எண்பி, இசைவு மறு, எதிர்த்தழி, செல்லாதாக்கு, பயனற்றதாக்கு.
Negativism
n. வெற்று மறுப்புவாதம், அழிவுவாதம்.
Neglect
n. புறக்கணிப்பு, புறக்கணிக்கப்பட்ட நிலை, புறக்கணிப்பு மனப்பான்மை, புறக்கணிப்புக்கு ஆளாகும நிலை, கருத்தின்மை, உன்னிப்பின்மை, கவனக்குறைவு, (வினை.) புறக்கணி, கவனியாதிரு, விழிப்புத் தளரவிடு, கவனிக்காது விடு, முடிக்காமல் வழுவு, செய்யத்தவறு.
Neglige
n. எளிமை உடை, எளிமைத் தோற்றம் மேற்கொண்ட உடை.
Negligence
n. கருத்தின்மை, கவனக்குறைவு, கவனிப்புக்குறைபாடு, பேணிப்பாராக் குறை, புறக்கணிப்பு, கட்டுப்பாட்டுத் தளர்வு, கலைத் துறையில் செயற்கைப் பண்புக்கு ஆட்படாத இயலௌதமைப்பண்பு.
Negligent
a. புறக்கணிக்கிற, கவனக்குறைவான, கதூன்றிச் செய்யப்படாத, பேணிப்பாராத, கட்டுப்பாட்டைப் புறக்கணிக்கிற, எண்ணிப்பாராத.
Negligible
a. புறக்கணிக்கத்தக்க, தள்ளிவிடக்கூடிய, சிறப்பில்லாத.
Negotiable
a. பணமாக மாற்றத்தக்க.
Negotiate
v. கூடிக்கலந்து பேசு, ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடு, இசைவிணக்க முறையிற கலந்து ஏற்பாடு செய், கலந்து பேசி முடிவுசெய், கைப்பொருள் பெற்றுப் பணமுறியை மாற்றிக்கொடு, காசாக மாற்று, கொடுத்து நாணய விலைமதிப்புப்பெறு, பெற்று நாணய விலைமதிப்புக்கொடு, வேலி தாண்டிச் செல், இடர் கடந்து செல், இக்கட்டு வகையில் ஒரு தீர்வு காண், இடர்நீக்கு.
Negotiation
n. ஒப்பந்தம் பேசுதல், பேரப்பேச்சு.
Negress
n. நீகிரோ இனப்பெண்.
Negrillo
n. நடு ஆப்பிரிக்காவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள குள்ள நீகிரோ இனத்தவர்.
Negrito
n. மலேயோ-பாலினீசிய நிலப் பகுதியிலுள்ள குற்றுருவ நீகிரோ இனத்தவர்.
Negro
n. நீகிரோவர், நீகிரோ இன ஆண், (பெ.) நீகிரோ இனத்தைச் சார்ந்த, நீகிரோக்களால் உறைவிடமாக்கப்பட்ட, நீகிரோக்களோடு தொடர்புகொண்ட, கருநிறமுடைய, கருமையான, இருண்ட.
Negro-head
n. காரமான கரும்புகையிலை, கீழ்த்தர ரப்பர்வகை.