English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nigger-brown
a. தவிட்டு நிறத்தில் கருஞ்சாயலான.
Niggle
v. சில்லறை விவரங்களில் காலத்தை வீணாக்கு, சில்லறை நுணுக்கங்களை அளவுக்கு மீறி விரிவுபடுத்து.
Niggling
a. மிகச் சிறுதிறமான, சில்லறையான, அற்பமான, பரந்த தன்மையற்ற, பெருந்தன்மையற்ற, கையெழுத்து வகையில் புரியாத.
Nigh
a. அருகிலுள்ள,(வினையிடை) அருகே.
Night
n. இரவு, இராக்காலம், இராப்போது, இருள், இருட்டு, மருட்சி, அறியாமை, துயர், தீமை, இராக்காலச் சிறப்பு நிகழ்ச்சி, இராக்கால நிலை, இராக்காலத் தனி அனுபவங்கள்.
Night-bird
n. ஆந்தை, இராக்குயில், ஒழுக்கக்கேடன், இராச்சுற்றி.
Night-blindness
n. இராக்குருடு, மாலைக்கண், மட்டொளியில் கண்தெரியாக் கோளாறு.
Night-boat
n. இரவுப் பயணப்படகு.
Nightcap
n. இரவுக்குல்லாய், உறக்கத்திற்குமுன் பருகும் வெறித்தேறல்.
Night-cellar
n. அடிநிலத்தமைந்த கீழ்த்தரச் சாராயக்கடை.
Night-closthes
n. இராக்கால உடை, படுக்கை உடுப்பு.
Night-club
n. இரவுவிடுதி, உறுப்பினர்க்கு மட்டும் இரவுணவு-படுக்கை-ஆடல் முதலியவற்றின் உரிமை அளிக்கும் நிலையம், இரவுக்கேளிக்கை விடுதி.
Night-dress
n. பெண்டிர் இரவு உடை, குழந்தையின் இராக்கால உடுப்பு.
Nightfall
n. கதிரவனடைவு, மாலை, இரவின் தொடக்கம்.
Night-flower
n. அல்லியின மலர், இரவில் மலர்ந்து பகலில் சுருங்கும் மலர்.
Night-glass
n. கடலின்கண் இரவிற் பயன்படுத்தும் குறுகிய தொலைநோக்கி.
Night-hag
n. சூனியக்காரி, இரவில் ஆகாயத்திற் பறந்து செல்லும் பெண் பிசாசு.
Night-hawk
n. இராக் கள்ளன், இராச்சுற்றி.
Nightingale
n. அல்லிசைப் புள், புலம் பெயர்வுறும் இன்னிசைப் பறவை வகை.
Night-jar,
விரைவிற் பறந்து செல்லும் இரவுப் பறவை வகை.