English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nick-nack
n. சிறுதிறப் பொருள்கள், பளுவற்ற சிறுதிறக் கருவிகலங்கள், சிறுதிறத் துணிமணித் துணுக்குக்கள்.
Nickname
n. விளையாட்டுப் பெயர், செல்லப்பெயர், (வினை.) செல்லப் பெயரிட்டழை, விளையாட்டுப் பெயர் கொடு.
Nicotian
n. சுருட்டு முதலியவை பிடிப்பவர், (பெ.) புகையிலை சார்ந்த.
Nicotine
n. புகையிலை நஞ்சு, புகையிலையிலிருந்து வடித்திறக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச்சத்து.
Nictate,nictitate
கண்கொட்டு, இமை, உள்ளிமைப்படலம் திறந்து மூடியாடப்பெறு.
Nicy
n. குழந்தை வழக்கில் இனிப்புத் தின்பண்டம்.
Nidamental
a. நத்தை வகைகளின் முட்டைத் திரளை வைப்பதற்குப் பயன்படுகிற.
Niddering
n. இழிமகன், கோழை, (பெ.) இழிவான, கோழையான.
Niddle-noddle
a. தலையாடுகிற, நடுங்குகிற, ஆட்டங்கொடுக்கிற, (வினை.) தலையாடிக் கொண்டிரு, தடுமாறு, தள்ளாடு, ஊசலாடு.
Nide
n. ஓரீடு, வான்கோழி, வகையின் ஓரீற்றுக்குஞ்சுகள்.
Nidificate,nidify
கூடு கட்டு.
Nid-nod
v. தலையசைத்துக்கொண்டேயிரு.
Nidus
n. பூச்சியினம் முட்டையிடுமிடம், சிதல்கள் அல்லது விதைகள் வளர்ச்சியடையுமிடம், நோய் விளையும் இடம், கோட்பாடு தழைப்புறும் இடம், இயற்கைக்கொள்கலம், முட்டைத் திரள், பருத்திரள்.
Niece
n. உடன்பிறந்தாரின் மகள், தமையன்-தமபி-தமக்கை-தங்கை மகள்.
Niello
n. வௌளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புவதற்கான கருப்புக் கலவைப்பொருள், வௌளிச் செதுக்கிற் கரும்வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பணி.
Niersteiner
n. வௌளைத் தேறல் வகை.
Nietzschean
n. நீட்ஷி என்னும் செர்மின் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர், நீட்ஷியின் கோட்பாடுகளை அதரிப்பவர், (பெ.) நீட்ஷி என்னும் செர்மன் மெய்விளக்கியலாருக்குரிய, நீட்ஷியின் கொள்கைகள் சார்ந்த.
Niggard
n. கருமி, பிசினாறி,கஞ்சன், (பெ.) உலோபியான, கைக்கடிப்புடைய.
Niggardly
a. பிசினாறியான, கஞ்சத்தனமான, வழங்க மனமில்லாத, கைக்கடிப்புடன் கொடுக்கிற, குறைத்துக்கொடுக்கிற, சிறுகச்சிறுகத் தருகிற, அற்பமான, சிறிதும் போதாத, (வினையிடை.) பிசினாறியாக, கருமித்தனமாக, போதும் போதாநிலையில்.
Nigger
n. நீகிரோவர், கருநிற மனித இனத்தவர், கரு மனிதர், கிழங்கு அரிக்கும் கருங் கம்பளிப் பூச்சி வகை.