English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ninety
n. தொண்ணூறு, (பெ.) தொண்ணூறான.
Ninevite
n. நினீவே என்ற பண்டைக்கால நகர வாழ்நர்.
Ninny
n. முட்டாள், பேதை, மனவுரம் அற்றவர்.
Ninon
n. இலேசான பட்டுத் துணி வகை.
Ninth
n. ஒன்பதாமவர், ஒன்பதாவது, ஒன்பதில் ஒரு கூறு, (பெ.) ஒன்பதாவதான, ஒன்பதில் ஒரு கூறான.
Niobe
n. கையாறுற்று ஆறாத்துயரிலாழ்ந்த அணங்கு, குழந்தைகளுக்காக அழுதுகொண்டேயிருந்த போது கல்லாகும்படி செய்யப்பட்ட பெண்.
Niobium
n. அருந்தலான உலோகத் தனிமம்.
Nip
-1 n. கிள்ளல், நெருடல், கடிப்பு, கொய்வு, ஊறுபாடு, கடுநோவு, ஊறுபடுத்துந் தன்மை, குளிரின் கடுப்பு, வசையின் உறுத்தல், கண்டனத்தின் உறைப்பு, கடித்தெடுத்த ஒல்லது கொய்த துணுக்கு, சுரங்கப்பாளத்தின் அரிப்பு, தேய்வு, (கப்.) வடக்கயிற்று நெரிவு, (வினை.) கிள்ளு, நெருட
Nip
-2 n. ஊக்கமூட்டுவதற்கான சிறிதளவு இன்தேறல், (வினை.) ஊக்கமூட்டுஞ் சிறிதளவு இன்தேறலை அருந்து.
Nipa
n. கிழக்கிந்திய பனையின மரவகை.
Nipper
n. கிள்ளுபவர், கிள்ளுவது, கடுப்பூட்டுபவர், படுப்பூட்டுவது, நலங்கெடுப்பவர், நலங்கெடுப்பது, மீன் வகை, சிறுவன், பழ விற்பனையாளரின் உதவியாள், தெருச்சுற்றிச் சிறுவன், வீடில்லாக் குழந்தை.
Nippers
n.pl. இடுக்கி, பற்றுக்குறடு, சாமணம், வில் அமைப்புடைய மூக்குக்கண்ணாடி, குதிரையின் முன்வாய்ப்பல், நண்டு இனத்தைச் சேர்ந்த உயிரினத்தின் கொடுக்கு.
Nipple
n. முலைக்காம்பு, முலைக்காம்பு பாதுகாப்புக் கவிகை, குழந்தைப் பால்புட்டிக் காம்பு, தோல்-கண்ணாடி-உலோகம் முதலியவற்றின் மீதுள்ள குமிழ் முளை, மலைமீதுள்ள சிறு முகடு, துப்பாக்கி விசைமீது மூடிப் பொருத்தப்படும் துளையிட்ட முனைப்பு.
Nipplewort
n. மஞ்சள் நிற மலருடைய களைச்செடி வகை.
Nirvana
n. வீடுபேற்றுநிலை.
Nisi
conj. இல்லாவிடில், ஒழிய.
Nisi prius
n. பொதுத்துறை வழக்குகளைப் பருவகால நீதிமன்றங்களில் நடுவர்கள் விசாரணை செய்தல், நடுவர்கள் பருவகால நீதிமன்ற விசாரணை நடவடிக்கை.
Nissen hut
n. வளையிருப்புக் குடில், திண்காரை நிலத்தளமும் சுரங்கம் போன்ற அமைப்பும் உடையதாய் வளைவு நௌதவான இரும்புத் தகட்டாலான குடிசை.