English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nizam
n. ஐதராபாத்தின் இடைக்கால அரசர், துருக்கி நாட்டுப் படைவீரர்.
No
n. இல்லையென்ற சொல், மறுப்புரை, மறுப்பு, ஒன்றுமில்லாதது, (பெ.) எத்தகையதும் அல்லாத, எதுவும் இல்லாத, எவரும் இல்லாத, ஒன்றும் இல்லாத, அல்லாத, மாறான, என்றுகூற முடியாத, உளதாகாத, கருத இடமிராத, வேண்டாத, சரியில்லாத, நேரமில்லாத, தவறான, மதிப்பற்ற, முக்கியத்துவமற்ற, (வினையிடை.) அப்படி அல்லாது, என்று கூற முடியாமல் அல்லாது.
Noachian,noachic
விவிலியக்கதை மரபுப்படி ஊழி கடந்து வாழ்ந்த மனிதவின முன்னேனான நோவா என்பவனைச் சார்ந்த, நோவா காலத்துக்குரிய.
Noahs ark
n. விவிலியக்கதை மரபுப்படி ஊழிவௌளத்தின் போது இறைவன் தன் அருட்சலுகையால் அதனின்று தப்ப நோவா பயன்படுத்திய தோணி, நோவா மேகமண்டலம்.
Noahs nightcap
n. மஞ்சள்வண்ண மலர்ச்செடி வகை.
Nob
n. தலை, இருவர் சீட்டாட்டவகையில் இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டல், இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டலால் வரும் கெலிப்புக்குறி, (வினை.) குத்துச் சண்டையில் தலையில் அடி.
Nobble
v. முறைகேடான மறைவழிகளில் சலுகைப்பெறு, ஒழுங்குகேடான தன்மையில் பணம் கைப்பற்று, குற்றவாளியைப் பிடி.
No-being
n. இல்பொருள், உளராகாதவர், இலா உருத்தோற்றம்.
Nobiliary
n. உயர்குடிச் சார்ந்த, பெருமக்கள் குழுவினுக்குரிய, உயர் குடியாளர் தொகுதியைச் சார்ந்த, பெருமக்கள் குடிப்பட்டத்துக்கு உரிய.
Nobility
n. உயர்குடிப்பிறப்பு, உயர்குடிப்பதவி, உயர் குடி மக்களின் தொகுதி, பெருந் தன்மை, உயர் பண்பு, மேதகைமை.
Noble
n. உயர்குடிமகன், பெருமகன், முற்கால நாணய வகை, (பெ.) உயர்குடியைச் சேர்ந்த, உயர் புகழ் பெற்றுள்ள, சிறப்பு வாய்ந்த, உயர் குணமுடைய, உயர் நோக்கமுள்ள, மே தக்க, பெருந்தன்மையுடைய, வண்ணப்பகட்டான, வீறார்ந்த தோற்றமுள்ள, மிகச்சிறந்த, மெச்சத்தகுந்த, உலோகப் பொருள்களின் காடிபற்றாத, களிம்பேறாத, துருப்படாத, வேதியியல் மாறுபாட்டில் கேடுறாத, கறைபடாத.
Noblesse
n. பெருங்குடிமக்களின் தொகுதி.
Nobody
n. ஒருவரும் இலார், பொருளல்லர்.
Nocent
a. தீமை செய்கிற, குற்றமுள்ள.
Nock
-1 n. குதை, வில்லின் நாண் பள்ளம், நாண் பற்றுவதற்கான அம்பின் காம்படி, (வினை.) அம்பை நாணில் தொடு.
Nock
-2 n. பாய்மர வகையின் முற்புற மேல் மூலை.
Noctamblant
a. இரவில் உறக்கத்தில் நடந்து செல்கிற.
Noctiflorous
a. இரவில் மலர்கிற.
Noctiluca
n. இருளில் ஔதவிடுகிற சிற்றுயிர்.
Noctivagant,noctivagous
a. இரவில் சுற்றித்திரிகிற.