English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Noctule
n. பிரிட்டனிலுள்ள மிகப்பெரிய வௌவால் வகை.
Nocturnal
a. இரவுக்குரிய, இரவிலுள்ள, இரவிற் செய்யப்பட்ட, இரவில் நடமாடுகிற.
Nocturne
n. கனவு போன்ற தூங்கிசைத் துணுக்கு, இரவுக் காட்சி ஓவியம்.
Nod
n. தலையாட்டம், அதிகாரத்தின் அடையாளமான தலையசைப்பு, (வினை.) தலையசை, தலையாட்டு, தலையாட்டி ஒப்புதல் அளி, தலையசைத்துக் கட்டளை தெரிவி, அரைகுறை உறக்க நிலையில் தலையை முன்னே சாயவிடு, அரைகுறை உறக்கம் கொள்.தள்ளாட, சாய், தன்னிறயாமல் தவறு செய்.
Nodal
a. கணுச்சார்ந்த, கரணைக்குரிய.
Noddle
n. (பே-வ.) தலை, மூளை, (வினை.) தலையசை, தலையாட்டு.
Noddy
n. முட்டாள், பேதை, வெப்பமண்டலக் கடற்பறவை வகை.
Node
n. முடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
Nodose
a. முடிச்சுள்ள, கணுவுள்ள, சிக்கலுள்ள, குமிழ்களுள்ள, புடைப்புள்ள.
Nodosity
n. முடிச்சுகளுள்ள தன்மை, முடிச்சு கணு, புடைப்பு, முனைப்பு.
Nodule
n. திரளை, சிறு உருண்டை, செடியில் சிறு கணு, புடைப்பு, முனைப்பு
Noel
n. நாவலோ கிறிஸ்துமஸ் பாடல்களில் மகிழ்ச்சி குறிக்கும் இடைச்சொல்.
Noes
n.pl. எதிர்மறுப்பு வாக்குக்கள், எதிர்மறுப்பு வாக்காளர்கள்.
Noetic
n. அறிவுத்திற ஆய்வியல், (பெ.) அறிவுத்திறம் சார்ந்த, கருத்தியலான, புலன்களுக்கு அப்பாற்பட்ட, கோட்பாட்டாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள.
Nog
-1 n. குற்றி, மரமுளை, ஆப்பு, சிறு மரக்கட்டை, மொட்டை மரக்கிளை, கிளைமுறிந்த அடித்தூறு, மரத்தின் பயனற்ற அடிக்கட்டை, (வினை.) ஆப்படித்திறுக்கு, மரமுளை அடித்துச் செப்பம் செய், மரச்சட்டத்தில் செங்கல் வேலைப்பாடமைத்துக் கட்டு.
Nog
-2 n. இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிளியாப் பகுதியில் வடிக்கப்பட்ட காரச் சாராய வகை.
Noggin
n. சிறு குடுவை, கடுந்தேறல் வகையில் சிறுமுகத்தால் அளவு, கால் 'பைண்ட்'.
Nohow
adv. வழியில்லாமல், ஒருவழியாலும் முடியாததாக, எவ்விதத்திலுமில்லாது.
Noil
n. குறுகிய கம்பளிச் சீவல் அல்லது சீவல்கள்.
Noise
n. கூச்சல், இரைச்சல், வெறுப்பான ஒலி, கடுமையான ஒலி, (வினை.) பேரொலி செய், பரவலாகத் தெரிவி.