English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Noumenon
n. உணர்வுரு, புலன்சாராத் தூய அகநிலை அறிவுணர்வால் உணரப்படும் கருத்துப் படிவம்.
Noun
n. (இலக்.) பெயர்ச்சொல்.
Nourish
v. ஊட்டிவளர், ஊட்டமளி, பேணு, ஆதரவு காட்டி ஊக்கப்படுத்து, வைத்துப் பேணு, பேணிக் கா.
Nourishment
n. உணவு, ஊட்டம், உணவூட்டம், உணவு அளிப்பு.
Nous
n. கிரேக்க மெய்விளக்கியலில் மனம், உள்ளம், அறிவு, (பே-வ.) பொது அறிவு வளம், உலகியலறிவுத் திறம், வன்மை வாய்ப்பு வளம்.
Nouveau riche
n. புதுப்பணக்காரர், புதுப்பதவியாளர்.
Novel
n. அகலப் புனைகதை, இத்தாலிய கலைஞர் பொக்காச்சியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத் தொடரில் ஒரு கதை, பண்டை ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை, (பெ.) புதிய, புதுமை வாய்ந்த, புதுவகையான, வியப்பளிக்கிற, முன்னம் அறிந்திராத.
Novelette
n. குறு நாவல், குறும் புனைகதை.
Novelist
n. அகலப் புனைகதையாளர்.
Novelize
v. அகலப் புனைகதையாக்கு, நாடகம்-உண்மை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அகலப் புனைகதையாக மாற்று.
Novelty
n. புதுமை, புதுத்திறம், புதிய கூறு, புதுமையான பொருள்.
November
n. ஆங்கில ஆண்டின் பதினோராவது மாதம்.
Novena
n. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் ஹீ நாள் தொடர்ந்த தொழுகை நோன்பு.
Novercal
a. மாற்றந் தாயின் தன்மையுடைய, மாற்றந்தாய்க்குரிய.
Novice
n. புத்தாள், புதிதாகச் சமயமாற்றம் பெற்றவர், புதுவர், சமய நிறுவனத்தில் உறுதி ஏற்காமலே தற்காலிகமாக ஏற்கப்பட்டிருப்பவர், அனுபவமற்றவர், திறமையற்றவர், தொடக்க நிலையாளர், புதுப்பயிற்சியாளர், கற்றுக்குட்டி.
Noviciate
n. புதுவர்நிலை, நிலைபேறுறாத் தேர்வுப் பருவநிலை, தேர்வுப் பருவக்காலம், புதுப்பயிற்சியாளர், புதுவரபாளர் தங்கிடம்.
Novocain
n. தேவையான பகுதியை உணர்ச்சியற்று மரத்துப்போகச் செய்யும் மருந்து.
Now
n. இந்தச்சமயம், நிகழ்காலம், (வினையிடை.) இப்போது, இந்நேரத்தில், இக்காலத்தில், இந்த சூழ்நிலையில், இப்பொழுது.
Nowaday
a. இக்காலத்திய, இக்காலம் பற்றிய.