English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nothingness
n. இல்பொருள் நிலை, ஒன்றுமில்லா நிலை, இல்லாப்பொருள், பயனற்ற தன்மை, சிறுதிறத் தன்மை, சிறப்பற்றது.
Nothings
n.pl. அற்பமானவை.
Notice
n. அறிவிப்பு, செய்தி, தகவல் தெரிவிப்பு, சட்டச் சார்பான முன்னறிவிப்பு, எச்சரிக்கை, முறைப்படியான தகவலறிவிப்பு, விளம்பரம், அறிவிப்புப்பலகை, விளம்பரப்பட்டி, துண்டறிக்கை, குறிப்பீடு, சுருக்கக் கருத்துரை, பத்திரிகை அறிவிப்புப் பத்தி, பத்திரிகை மதிப்புரை, கவனம், கவனிப்பு, தெரிநிலை, அறிவு, தகவல் உணர்ந்த நிலை, (வினை.) கவனி, கவனம் செலுத்திப்பார், உற்று நோக்கு, கவனத்தில் எடுத்துக்கொள், கருத்துச் செலுத்து, அக்கறை காட்டு, உணர்ந்ததாகக் காட்டிக்கொள், கண்ணோட்டஞ் செய், அருளாதரவு காட்டி நய இணக்கத்துடன் நடத்து, குறிப்பிடு, குறித்துச் சொல், கருத்துரை வழங்கு, சட்டப்படியான முன்னறிவிப்பு வழங்கு, முறைப்படி அறிவிப்பு செய்.
Notice-board
n. பொது அறிவிப்புப் பலகை, விளம்பரப் பலகை.
Notifiable
a. தெரிவிக்கப்பட் வேண்டிய.
Notification
n. விளம்பர அறிவிப்பு, விளம்பரம்.
Notify
v. தெரியப்படுத்து, அறிவி, அறிவிப்புச் செய், எச்சரிக்கை அறிவிப்புக்கொடு.
Notion
n. கருத்து, எண்ணம், உட்கோள், கருத்துப்பாங்கு, தனிக் கோட்பாடு, எண்ணப்போக்கு, தனிப்பட்ட கொள்கை, கோட்பாட்டு விளக்கம், கருத்துச்சாயல், எண்ணச்சார்பு, மலிவான கலைநுட்பம் வாய்ந்த சிற்றணிமணிப்பொருள், (மெய்.) பொருளுலகு பற்றிய பரவலான பொதுக் கருத்துப் படிவம்.
Notional
a. கருத்தியலான, வெறுங்கோட்பாடு சார்ந்த, செயல் தேர்வாராய்ச்சி மூலம் நிறுவப்படாத, நினைவியலான, மெய்யல்லாத, புனைவியலான, கற்பிதமான.
Notions
n.pl. விஞ்செஸ்டர் கல்லூரியின் தனிமரபுச் சிறப்புடைய சொற்றொகுதி.
Notobranchiate
a. முதுகுப்புறமான செவுள்களையுடைய.
Notochord
n. முதுகெலும்புக்கு மூல அடிப்படையாக அமையும் குருத்தெலும்புத் தண்டு.
Notogaea
n. விலங்குநூலில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து புதிய வெப்பமண்டலப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரப்பு.
Notonecta
n. படகுத்தும்பி, முதுகுப்புறமாக நீந்தும் நீர் வண்டு வகை.
Notorious
a. வசைப்பெயர் எடுத்த, தகாவழிப் பேர்போன, இகழார்ந்த, அறிபழியான.
Notre-dame
n. பாரிஸ் நகரத்து மாதா கோயில்.
No-trumper
n. துருப்பு ஏதுமில்லாமல் ஆட்டமாடுபவர்.
Notwithstanding
adv. இந்நிலையில்கூட, முற்றிலும் மாறான தன்மையில் எப்படியிருந்தாலும்.
Nougat
n. கொட்டைப்பருப்பு-சக்கரை கலந்த இனிப்புத்தின் பண்டம்.
Nought
n. ஒன்றுமில்லை, ஏதுமின்மை, இன்மை, வெறுமை, (கண.) சுன்னம்.