English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Northwards
n. வடமுகப்பக்கம், (வினையிடை.) வடக்கு நோக்கி.
North-wester
n. வடமேற்குக் காற்று.
Norwegian
n. நார்வே நாட்டுக் குடிமகன், நார்வே நாட்டு மொழி, (பெ.) நார்வே நாட்டைச் சார்ந்த.
Nor-wester
n. வடமேற்குக் காற்று, கடுந்தேறல், கண்ணாடிக்கலம், எண்ணெய்த்தோல் குல்லாய்.
Nose
n. மூக்கு, அலகு, அலகுப்பகுதி, நீள் கூம்பு, துருத்து முனை, குழாய்-துருத்தி-வாலை முதலியவற்றின் திறந்த முன்புறக் கூம்புப்பகுதி, கப்பல் முகப்பு, கூர்ங்குவடு, படி முதலியவற்றின் கொடுமுனை. (க-க.) சுவரின் புடை கூம்பணி, முகர்வுணர்வு, வைக்கோல்-தேயிலை முதலியவற்றின் மணம், மோப்பம், முகர்வாற்றல், புலங்கண்டுபிடிக்கும் தனி இயல்திறம், (வினை.) முகர், முகர்ந்தறி, மணத்தால் கண்டுணர், மோப்பம்பிடி, கூர்ந்து கண்டறி, புலங்காண், ஒற்றாடு, துழாவித்தேடு, மூக்கால் துடை, மூக்குகொண்டு தேய், மூக்கை நுழை, தலையிடு, புறந் துருத்து, உள்ளே துளைத்துச் செல், கப்பல் வகையில் நெருக்கி வழி உண்டு பண்ணிக் கொண்டு முன்னேறு.
Nose-ape
n. நீண்ட மூக்குள்ள குரங்கு வகை.
Nosebag
n. குதிரையின் தலையில் மாட்டப்படும் தீவனப் பை.
Noseband
n. குதிரையின் கன்னப்பகுதி வார்களோடு இணைக்கப்படும் கடிவாளப்பட்டை.
Nosedive
n. வானூர்தியின் கீழ்நோக்கிய பாய்வு, (வினை.) வானூர்தி வகையில் கீழ்நோக்கிப் பாய்.
Noseflute
n. சயாம் நாட்டினராலும் பீஜி மக்களாலும் மூக்கால் ஊதப்படும் இசைக்குழல் வகை.
Nosepiece
n. உருப்பெருக்கி கண்ணாடியில் நடுச்சில் பொருத்தப்பட்ட பகுதி.
Noser
n. கடுமையான எதிர்க்காற்று.
Nosey parker
n. பிறர் காரியங்களில் தலையிடுபவர்.
Nosing
n. படிவரிசை, படிவரிசை விளிம்பின் உலோக முகப்பு.
Nosography
n. நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை.
Nosology
n. நோய் வகுப்பாய்வு நூல்.
Nostalgia
n. தாயகநாட்டம், வீட்டுநினைவுத் துயரம், பழங்கால நாட்டம்.
Nostoc
n. பசுநீல வண்ணப் பசைப்பண்புடைய பாசிவகை.
Nostradamus
n. குறிகூற்றார்வலர், வருங்குறி கூறுவதே தொழிலாகக் கொண்டவர்.