English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Orchis
n. இங்கிலாந்து நாட்டில்ட பகட்டான பல்வண்ண மலர்களையும் மெல்லிய நிமிர்த்த தண்டுகளையுமுடைய ஒற்றை விதைச் செடியினக் குழுவின் வகை.
Orchitis
n. அண்டவாதம், விரைவீக்கம்.
Orcin
n. (வேதி) பாசி வகையிலிருந்து எடுக்கப்பட்டுப் பல்வேறு சாயங்களைத் தரும் நிறமற்ற பளிங்கனைய பொருள்.
Orcorca
n. திமிங்கில வகை, கடல்வாழ் பெருவிலங்கு.
Ordain
v. விதித்தமை, ஊழமைவாக்கு, ஆணையிட்டமர்த்து, சமயப்பணியில் அமர்த்து, அமர்வு வினையாற்று, புனிதப் பதவிப்படி சார்த்தியருள், பணியுரிமையளி, வகுத்தொழுங்குபடுத்து, ஒதுக்கிவை, நிறுவு, நிலைப்படுத்து.
Ordainment
n. விதித்தல், கட்டளை.
Ordeal, ordeal
சோதனைமுறை, எண்ணெய்க் கொப்பரை முதலிய கடுந்தேர்வு.
Order
n. உத்தரவு, விதிமுறை, கட்டளைமுறை, பணித்துறைச் செயற்கட்டளை, பண வகையில் அளிப்பாணை, சரக்கு வகையில் அனுப்பாணை, உத்தரவுச் சீட்டு, ஒழுங்கு வரிசைமுறை, படையணி, அமைதி, நேர்மை, தகவு, செப்பம், துப்புரவு, மரபொழுங்கு, முறைமை, வகைமுறை, நிறுவனம், அமைப்புக்குழு, நன்மதிப்புக்குப, வீரத்திருத்தகைத தொகுதி, அமைப்புச் சின்னம்,. நன்மதிப்புச் சின்னம், வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம், சமயப் பணித்துறை அமைப்பு, பூர்வாங்கச் செயல்முறை, துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை, (தாவ) இனக்குழுமம், (கண) அடுக்குத் தொடரின் படிமுறை, எண்ணின் மதிப்பளவு,. சேர்மங்களின் இணைவுப்படி, (வினை) ஒழுங்குபடுத்து, முறைப்படுத்து, அமைவி, ஊழ்வகையில் வகுத்தமை, உத்தரவிடு, வகுத்தளி, போகும்படி கட்டளைப்படுத்து, கொண்டு வரும்படி ஏவு, வரவழை, துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு, ஏவி நடத்து, செயலாணை செய்.
Orderly
n. பணித்முறைத் துணைவர், படைத்துறை மருந்தகத் துணை ஏவலர், (பெயரடை) ஒழுங்கு முறைப்பட்ட, கட்டுப்பாடுகளை மதித்து நடக்கிற, ஒழுங்கமைதியுடைய, நடையமைதி வாய்ந்த, படைத்துறையில் ஆணை நிறைவேற்றும் பொறுப்புடைய.
Orderly-room
n. படைவீட்டில் படைப்பிரிவின் அலுவலக அறை.
Orders
n. pl. சமயப்பணித் தரங்கள், தறவுப் பணிநிலைகள், மேலிட உத்தரவுகள்.
Ordinal
n. எண் வரிசைமுறைப் பெயர், சமயத்துறைப் பணியேடு, சமயப்பணி நேர்வமர்வுப் பதிவேடு, (பெயரடை) எண் வகையில் வரிசைமுறை சுட்டுகிற, படிமுறை குறித்த.
Ordinance
n. உரிமைக்கட்டளை, மேலாணை, சமயவினை.
Ordinand
n. திருநேர்வாளர், சமயப்பணியமாவிற்கு உரியவர்.
Ordinary
n. சமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர், பொதுமுறை நீதிபதி, (பெயரடை) பொதுமுறையான, சாதாரணமான, வழக்கமான, வாடிக்கையான, சிறப்பற்ற, பொதுநிலையான, பணிச் சார்புக்குரிய, பொதுமுறை உரிமை வாய்ந்த, ஆணைச்சார்பற்ற, அழகு முனைப்பற்ற, நடுத்தரமான.
Ordinate
n. (வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை, (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
Ordination
n. பதவியளிப்பு, ஆச்சாரிய அபிடேகம், வகைப்படுத்துதல், வரிசைப்படுத்துதல், ஆணையிடல்.
Ordinee
n. புதிதாக நியமிக்கப்பட்ட சமயவட்டத் துணைவர்.
Ordnance
n. பீரங்கி, சகடத்திடின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம்.
Ordure
n. பிழுக்கை, எச்சம், கொச்சைப் பேச்சு.