English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Osmoseosmosis
n. (இய) ஊடுகலப்பு, துளைகள் உள்ள இடைத்தடுப்புக்கள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முட்கலக்குந் தன்மை.
Osmund
n. பூக்குஞ் சூரல் வகை.
Osprey
n. மீன் கொத்தித்தின்னுங் கழுகு போன்ற பெரிய கடற்பறவை வகை, தொப்பி மேல் பஞ்சு போன்ற மெல்லிறகு.
Osseous
a. எலும்பாலான, எலும்பு உட்கொண்ட, எலும்புக் கூடுடைய, எலும்பாகிவிட்ட, புதைபடிவ எலும்புகள் நிறைந்த.
Ossify
v. எலும்பாக மாறு, எலும்பாக மாற்று, கடினமாகு, கடினமாக்கு, கெட்டிப்படு, வாட்டு, வளர்ச்சியறச் செய்.
Ossuary
n. என்புக்கலம், இறந்தவர்களின் எலும்புகள் வைக்கும் கலம், பழைய எலும்புகள் காணப்படும் குகை, எலும்புகள் அடுக்கி வைக்கப்படும் வீடு அல்லது நிலவறை.
Ostensible
a. பகட்டுவௌதப்படையான, வௌதவேடமான, உண்மையை மறைததுக்காட்டுவதற்கான, காட்சிக்குரிய.
Ostensory
n. திருமேனிக்கலம், நற்கருணை வினையால் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட அப்பத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவதற்கான பொன் அல்லது வௌளியாலான திறந்த கொள்கலம்.
Ostentation
n. பகட்டாரவாரக்காட்சி, ஆரவாரப்பகட்டு, பணப்பகட்டு, இன்பப்பொருட்பகட்டு, பிறரின் கவனத்தைத் கவருவதற்கான முயற்சி.
Osteogenesis
n. எலும்பு உருவாதல்.
Osteography
n. எலும்புகளைப் பற்றிய நுல்மரபு விளக்கம்.
Osteology
n. எலும்புகளைப் பற்றி ஆயும் உள்ளுறுப்பியல், விலங்கின் எலும்புக்கட்டுமான அமைப்பு.
Osteomalacia
n. என்புமென்பாடு, மண்ணியல் உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையாகுதல்.
Osteomyelitis
n. நிணவெலும்பு நீக்கம்.
Osteopath
n. வன்மப்பிடி மருத்துவர், தசையைப்பிடித்து விடுதலால் நோய் நீக்கும் மருத்துவர்.
Osteopaty
n. வன்மப்பிடிமுறை, தசைபிடித்து விடுவதால் குணப்படுத்தும் மருத்துவ முறை.
Ostiary
n. மாதா கோயில் வாயிலோன்.
Ostler
n. தங்குமனைகளிலுள்ள குதிரைக்காரன், குதிரை இலாயத்தான்.
Ostraciasm
n. நாடுகடத்தல், தள்ளிவைப்பு, சமுதாயத்திரிருந்து ஒதுக்கி வைத்தல்.