English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Podagra
n. (மரு.) சூலை, சந்துவாதம், கால் சந்துவாதம்.
Podagra, podagric, podagrous
சந்துவாதஞ் சார்ந்த, கால சந்துவாதம் பீடித்துள்ள.
Podded
a. நெற்றுடைய, நெற்றாகக் காய்க்கிற, நெற்றுவிடுகிற, நெற்றாக வளர்கிற, செல்வநிலையில் உள்ள, இன்ப வாய்ப்பு நலமார்ந்த.
Podesta
n. இத்தாலிய நகராட்சிகளில் உள்ள குற்றவில் நடுவர், (வர.) இடைநிலைக்கால இத்தாலிய நகரங்களின் முதன்மையான குற்றவியல் நடுவர்.
Podge
n. (பே-வ.) கொழுத்துக் குறுகிய ஆள்.
Podium
n. நெடுமேடைப்பீடம், அரங்கைச் சுற்றியுள்ள உயர்மேடை, அறையைச் சுற்றியுள்ள தொடர் விசிப்பலகை.
Podophyllin
n. (வேதி.) குடலிளக்கும் இயல்புள்ள கசப்பான மஞ்சள் குங்கிலிய வகை.
Poe-bird
n. கருஞ்சிறகும் வௌளைக் கழுத்தும் உடைய நியூசிலாந்து பறவை வகை.
Poem
n. செய்யுள், பா, இன்னறுஞ் செய்யுள்வகை, இயைபமைதிச் செய்யுள்.
Poet
n. கவிஞர், பாவலர், செய்யுள் யாப்பவர்.
Poetaster
n. புன் கவிஞர், இழிபொருட் பாவலர்.
Poetic
a. கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, பாட்டின் நல்லியல்புகள் வாய்ந்த.
Poetical
a. கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, செய்யுள் வடிவில் எழுதப்பட்ட.
Poeticize
v. கவிதைக்குரியதாக்கு, பாடல் வடிவினதாக்கு.
Poetize
v. கவிஞனாக எழுது, பாவலன் போலப்பாடு, கவிதையாக்கு, பாடல்வழியாகப் புகழ் நிறுவு.
Poetry
n. கவிதை, செய்யுட்கலை, உயர்கருத்தின் உயர்சொற் சந்த யாப்பு, உயர்நிலை உணர்ச்சியின் வீறார்ந்த சொற்கோப்பு, கவிதைத்தொகுதி, ஆழ்ந்த உணர்ச்சி பாடலுக்குரிய தகுதியமைந்த கருத்து, ஆழ்கருத்து.
Pogo
n. போகல் விசைக்கட்டை, வில்லமையுடன் கூடிய குதித்தல் விளையாட்டுக் கருவி வகை.
Pogrom
n. (வர.) நுழிலாட்டு, திட்டமிட்ட ருசிய நாட்டு யூதர் படுகொலை.