English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Plutonium
n. பொன்னாகம், அணு எண்.ஹீ4 கொண்ட தனமம்.
Pluvial
n. மழையங்கி, (பெ.) மழை சார்ந்த, மழையுள்ள, (மண்.) மழையினால் ஆக்கப்படுகிற.
Ply
-1 n. துணி முதலியவற்றின் வகையில் மடிப்பு, திண்மை, கனம், அடுக்கின் ஓர் அடை, பாளம், படலம், கயிறுமுதலியவைகளின் இழை அல்லது புரி, போக்கு, பாங்கு.
Ply
-2 v. ஊக்கத்துடன் பயன்படுத்து, கையாளு, மும்முரமாக ஈடுபடு, வினாக்களை அடுக்கு, வாதங்களினால் விரைந்து தாக்கு, உணவு முதலியவற்றை இடைவிடாமல் தருவித்துக்கொடு, (கப்.) காற்று வருந்திசை நோக்கிச் செலுத்து, போய்வந்து கொண்டிரு, வாடகைக்காக விடு.
Plymouth
n. இங்கிலாந்தில் தென்மேற்கிலுள்ள துறைமுகம், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மாதாச்சுஸெட்ஸ் அரசிலுள்ள துறைமுக நகரம்.
Plywood
n. ஒட்டுப்பலகை, படலங்களின் இழைவரை ஒன்றற் கொன்று குறுக்காக வைத்து ஒட்டிச் செய்யப்படும் மெல்லிய வன் பலகை.
Pneumatic
n. காற்றுப்பட்டை, காற்றடைந்த குழாய்ப் பட்டை, காற்றடைத்த குழாய்ப்படை வாய்ந்த மிதிவண்டி, (பெ.) வளி சார்ந்த, காற்றுக்குரிய, வளி இயக்கத்தால் செயற்படுகிற, பறவைகளின் எலும்புகள் வகையில் காற்றுக் குழிவுகள் கொண்ட, காற்றுக் குழிவுகள் சார்ந்த, ஆன்மிக உயிர்நலஞ் சார்ந்த.
Pneumaticity
n. வளிகொள் இடங்கள் வாய்க்கப்பெற்றுள்ள நிலை.
Pneumatics
n. வளி ஆய்வியல்.
Pneumatocyst
n. பறவை முதலியவற்றின் உடம்பிலுள்ள காற்றுப்பை.
Pneumatology
n. ஆவிகளைப் பற்றிய கோட்பாடு, தூய ஆவிபற்றிய கோட்பாடு, உள நுல்.
Pneumatometer
n. மூச்சுமானி.
Pneumatophore
n. (தாவ.) மூச்சு வேர், சதுப்புநிலச் செடிகளில் காற்று உறிஞ்சுவதற்காக மேல்நோக்கி வளரும் வேர்.
Pneumogastric
a. நுரையீரல்களையும் இரைப்பையையுஞ் சார்ந்த.
Pneumonia
n. சனிக்காய்ச்சல், சீதசன்னி, நுரையீரல் இழைமங்கள் ஒரு பகுதியோ முழுதுமோ வீங்கிய நிலை.
Pneumonic
n. நுரையீரல் நோய்களுக்கான மருந்து, (பெ.) நுரையீரல்கள் சார்ந்த.