English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Plunk
n. இசைக்கருவியின் தந்திகளைத் தெறித்தலால் எழும் ஒலி, (பே-வ) பலத்த அடி, (பே-வ) அமெரிக்க வௌளி நாணயம், (வினை.) இசைக்கருவித் தந்தி வகையில் மீட்டொலிசெய், திடீரெனத் தள்ளு, தொப்பென விழு, எதிர்பாராவகையில் தாக்கு.
Pluperfect
n. (இலக்.) முடிவு சுட்டிய சென்றகாலம், இறந்த காலத்துக்கு இறந்த காலம், குறிப்பிட்ட இறந்த காலத்துக்கு முன்பே முடிந்துவிட்ட செயலைத் தெரிவிக்கிற காலம், (பெ.) இறந்த காலத்துக்கு இறந்த காலமான.
Plural
n. (இலக்.) பன்மை, பன்மையெண், பன்மைப்பெயர் வடிவம், பன்மை வினைவடிவம், (பெ.) பன்மைகுறித்த, ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற, இருமை எண்முறை உள்ள மொழிகளில் இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிப்பிடுகிற, எண்ணிக்கையில் ஒன்றிற்கு மேற்பட்ட.
Pluralism
n. பல்பதவியாண்மை, ஒரே வேளையில் பல பதவிகளை வகித்தல், (மெய்.) பன்மை வாதம், மூலப்பொருள்கள் ஒன்றிற்கு மேற்பட்டவை என்று கொள்ளும் அனேகான்ம வாதம்.
Pluralist
n. பல் பதவியாளர், ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிலைகளைத் தாங்குபவர், (மெய்.) பன்மைவாதி, அனேகான்ம வாதி.
Plurality
n. பன்மை, பலவாயிருக்கும் நிலை, பேரெண்ணிக்கை கூட்டம், திரள், ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளை வகித்தல், ஒன்றிற்கு மேற்பட்ட மானியங்களைக் கைக்கொண்டிருத்தால், மற்றொன்றனோடு சேர்த்து வகிக்கப்படும் பதவி, வாக்குகள் முதலியவற்றின் வகையில் பெரும்பான்மை.
Pluralize
v. பன்மையாக்கு, பன்மை வடிவத்திற் கூறு, ஒன்றிற்கு மேற்பட்ட திருக்கோயில் மானியங்களை வைத்துக் கொண்டிரு.
Pluriliteral
a. (இலக்.) மூன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களையுடைய.
Pluripresence
n. எங்கெங்கும் இருத்தல்.
Pluriserial, pluriseriate
a. பல வரிசைகள் கொண்ட.
Plus
n. கூட்டல் குறி, கூடுதலான அளவு, நேர் அளவு, எதிர்மறையல்லாத அளவை, (பெ.) கூடுதலான, மிகையான, மிகுதிப்படியான, (கண.) நேரான, எதிர்மறையல்லாத, கூட்டப்பட்ட, (இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய, நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட, குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய, உடன் சேர்க்கப்பட்டு.
Plus-fours
n. pl. நீண்டகன்ற காற்சட்டை.
Plush
n. மெத்தென்ற பூம்பட்டுவகை.
Plushes
n. pl. பணியாள் காற்சட்டை வகை.
Plutarchy
n. செல்வராட்சி.
Plutocrat
n. பொருட்செல்வ வலிவர்.
Plutolatry
n. செல்வப்பூசனை, பண வழிபாடு.
Plutonian
a. கிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத் தெய்வஞ் சார்ந்த, கீழுலகுக்குரிய, மிகுதொலைக்கோளான சேணாகஞ் சார்ந்த.
Plutonic
n. அழற்பாறை, அடிநில வெப்பழலால் உண்டானபாறை, (பெ.) தொலைக்கோளான சேணாகம் சார்ந்த, கிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத்தெய்வஞ் சார்ந்த, கீழுலகுக்குரிய, (மண்.) தீ சார்ந்த, அடிநில வெப்பால் உருவான, எரிமலையால் ஆக்கப்பட்ட.
Plutonist
n. மண்ணியல் துறையில் அடி நில வெப்பத்தின் சிறப்பை வலியுறுத்திய ஜேம்ஸ் ஹட்டன் என்பவரைப் பின்பற்றுபவர்.