English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Plummer-block
n. (இய.) சுழலும் நடு அச்சினைத் தாங்குவதற்கான உறையுடன் கூடிய உலோகச்சட்டம்.
Plummet
n. தூக்குநுல், தூக்குநுற் குண்டு, ஆழம் பார்ப்பதற்கான கருவியின் ஈயக்குண்டு, அழுத்துசுமை, தடங்கலாயிருக்கும் பாரம், தக்கையை நேர்நிறுத்தும் பொருட்டுத் தூண்டிற் கயிறுடன் இணைக்கப்படும் பளு.
Plummy
a. உலர்ந்த கொடிமுந்திரிப் பழங்கள் சார்ந்த, கொடிமுந்திரிப் பழங்கள் மலிந்த, வளமான, நல்ல, உகந்த.
Plumose
a. இறகு போன்ற, இறகுகளையுடைய.
Plump
-1 a. கொழு கொழுத்த, சதைப்பற்றுள்ள, உருண்டுதிரண்ட, முழுநிறைவான, (வினை.) கொழுக்கப்பண்ணு, கொழுப்பேறு, உருட்சி திரட்சியுறு, புடைத்து வீங்கு, பருமனாகு.
Plump
-2 n. திடீரென மூழ்குதல், பளுமிக்கதன் வீழ்ச்சி, (பெ.) நேர்முகமான, மட்டுவரைப்படாத, மொட்டையான, (வினை.) திடீரென மூழ்கு, செங்குத்தாக விழு, வாக்குகளைப் பலருக்குப் பங்கிடாமல் ஒருவருக்கே அளி, (வினையடை.) தடாலென,சடுதியில், செங்குத்தாக, ஔதவு மறைவின்றி.
Plumper
-1 n. வாய்த்திரள் தக்கை, குழிவிழுந்த கன்னங்களை உருட்சியாக்கும் பொருட்டு வாயில் அடைத்து வைத்துக் கொள்ளப்படும் பந்து அல்லது வட்டுப் போன்ற தக்கைப் பொருள்.
Plumper
-2 n. தடாலென்ற வீழ்ச்சி, செங்குத்தான முக்குளிப்பு, தடாலென்ற அடி, வாக்குகளைப் பலருக்குப் பகிர்ந்தளிக்காமல் ஒருவருக்கே அளிப்பவர், ஒருவருக்கே அளிக்கும் வாக்கு, புளுகு, பச்சைப்பொய்.
Plumpness
n. மொழுமொழுத்த தன்மை, உருண்டு திரண்டிருக்கை.
Plum-pudding dog
n. வண்டியுடன் ஓடுவதற்காக வைத்திருக்கும் புள்ளி நாய் வகை.
Plum-pudding stone
n. (மண்.) தீக்கல் போன்ற கூழாங்கற்கள் கொண்ட கூட்டுப்பாறை.
Plumule
n. முளைக்குருத்து, பறவைகளின் சிறு மென்தூவி.
Plumy
a. இறகு போன்ற, இறகு மூடிய, மென் தூவிகள் போர்த்த, பெரிய இறகுகளால் ஒப்பனை செய்யப்பட்ட
Plunder
n. கொள்ளை, சூறை, சூறைப்பொருள், கொள்ளை ஆதாயம், (வினை.) கொள்ளையிடு, சூறையாடு, போரில் பறி, திட்டமிட்டுப் பறி, பிறர் பொருளைக் கையாடு.
Plunderage
n. கொண்டி, கொள்ளையடித்தல், கப்பலில் சரக்குகளைத் திருடுதல், கையாடிய பொருள், கொள்ளையடித்த பொருள்.
Plunderer
n. கொள்ளைக்காரன்.
Plunge
n. மூழ்குதல், முழுக்கு,திடீர்த் தோய்வு, துணிகர முனைப்பு, இடர் நுழைவு, (வினை.) தடாலென்று நீரில் பிடித்துத் தள்ளு, நெருக்கடிக்குள் வீழ்த்து, செடித் தொட்டியை நிலத்தில் ஆழப் பதியவை, மூழ்கு, துணிந்திறங்கு, அறையில் அவசரசமாக நுழை, படிக்கட்டில் வேகமாக இறங்கு, படிக்கட்டில் வேகமாக ஏறிச்செல், குதிரைவகையில் முன்னால் வேகமாகப் பாய், கப்பல் வகையில் நீளவாட்டாகச் சாய்ந்து மூழ்கு, வஜ்ம்பின்றிச் சூதாடு, கடனாளியாகு.
Plunge-bath
n. முழ்கு நீர்த்தொட்டி.
Plunger
n. மூழ்கடிப்பவர், மூழ்குபவர், மூழ்குபவது போன்ற இயக்கத்துடன் செயற்படும் இயந்திர உறுப்புக்கள்.
Plunging
n. முக்குளிப்பு, முழுக்குதல், மூழ்குதல், (பெ.) முக்குளிக்கிற, பாய்கிற.