English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pliocene
n. (மண்.) நில அடுக்கின் மூன்றாவது பிரிவின் புத்தம் புதிய பிரிவு, (பெ.) (மண்.) நில அடுக்கின் மூன்றாவது படிவின் புத்தம் புதிய பிரிவு சார்ந்த.
Plly
a. (பே-வ.) இணக்கமான, நட்பான.
Plod
n. கடும் உழைப்பு, கடு நடை, (வினை.) கடு முயற்சியுடன் உழை, அடிமையாக உழை, இடைவிடாது நட.
Plombe
a. அலுவலக முத்திரையிடப்பட்ட.
Plop
n. தொப்பென்ற ஒலி, தொப்பென்ற ஒலியோடு நீரில் விழுதல், (வினை) தொப்பென்ற ஒலியோடு விழச்செய், தொப்பென்று விழு, (வினையடை.) தொப்பென்ற ஒலியோடு.
Plot
n. மனையிடம், நிலக்கூறு, கதையமைப்பு, கதையின் நிகழ்ச்சிக்கூறு, சூழ்ச்சி, மறைசதி, மறைபொறித்திட்டம், (வினை.) மனைப்படம் எழுது, சதித்திட்டமிடு, மறைசூழ்ச்சிசெய்.
Plough
n. ஏர், கலப்பை, உழுத நிலம், கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று, தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல், (வினை.) உழு,சாலிடு, புரட்டு, நிலம்பறி,கிளறு, கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு, கல்லியெறி, சால்வரியிடு, நெற்றியில் திரைவிழச் செய், மிகு உழைப்போடு முன்னேறிச்செல், கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல், வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல், தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய்.
Plough-beam
n. ஏர்க்கால்.
Plough-boy
n. உழவுக் கால்நடைகளை ஓட்டுபவன், உழவுக் கால்நடைகளை நடத்துபவன்.
Plough-land
n. உழுது பண்படுத்துதற்குரிய நிலம், (வர.) நிலப்பரப்பளவு அலகு, ஓர் ஆண்டு காலத்தில் எட்டு எருதுகளைக் கொண்டு உழக்கூடிய பரப்புளள நிலம், இங்கிலாந்தின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வரிவிதிப்பு நில அளவின் அலகு.
Ploughshare
n. உழுமுனை, கொழு.
Plough-shoe
n. உழுமுனையின் உறை, கொழுவினைத்தாங்கிப் பிடிக்கும் அமைவு.
Plough-staff
n. கலப்பையிலிருந்து மண் முதலியவற்றை அகற்றுவதற்கான கருவி.
Plough-tail
n. கைப்பிடியுடைய கலப்பைமுனை, மேழிப்பிடி, பண்ணைவேலை.
Plover
n. ஆட்காட்டி குருவியினத்தைச் சேர்ந்த பறவை வகை.
Ploy
n. வேலை, அலுவல், தொழில்முறை ஏற்பாடு, தொழில் முறைப் பயணம்.
Pluck
n. பறித்தல், சட்டென்று இழத்தல், இசிப்பு, தேர்வில் தோல்வி, உணவு வகையில் ஆட்டின் குலை, விலங்கின் நெஞ்சுப்பை-நுரையீரல்-கல்லீரல்-உயிர்ப்புக்குழல் கொண்ட ஊன் தொகுதி, துணிவு, உரம், ஊக்கம், (வினை.) பறி, பிடுங்கு, இழு, இழுத்துச்செல், தென்னியிழு, வெட்டியிழு, பறவையின் இறகுகளை அகற்று, கொள்ளையிடு, மோசடி செய், மாணவரைத் தேர்வில் தோலிவியுறச்செய்.
Plucked
a. பறிக்கப்பட்ட, தேர்வில் தள்ளிவிடப்பட்ட.