English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Predicable
n. பயனிலைமானம், ஒன்றைக்குறித்துக் கூறப்படத்தக்கது, (பெ.) பயனிலைமானமாக ஒன்றைப்பற்றிக் கூறத்தக்க.
Predicables
n. pl. அரிஸ்டாட்டில் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரால் எழுவாய் மானத்தோடு தொடர்பு நோக்கி வகுக்கப்பட்ட இனம்-வகை-வகைதிரிபு-இனப்பண்பு-தனிப்பண்பு ஆகிய ஐந்த பயனிலைமானப் பிரிவுப்ள்.
Predicament
n. இக்கட்டுநிலை, இடர்ப்பாட்டுநிலை, இடுக்கட்பட்ட நிலைமை, குறித்தேற்றிக் கூறக்கூடியது, அரிஸ்டாட்டில் என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் வகுத்தஐரத்த பொருள்- அளவை-பண்பு-தொடர்பு-இடம்-காலம்-கிடப்புநிலை-உடைமை-செயல்-செயலின்மை என்ற பத்துப் பயனிலை மானக் கூறுகளில் ஒன்று.
Predicant
n. தென் ஆப்பிரிக்காவில் டச்சுப் புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு, (பெ.) சமயத்துறைக் குழுவினரிடையே சமயச் சொற்பொழிவாற்றுகின்ற.
Predicate
-1 n. (அள.) பயனிலைமானம்., வாசகத்தின் பயனிலைப்பகுதி, குறித்து ஏற்றிக் கூறப்படுவது, (இலக்.) பயனிலை, வாசகத்தின் பயனிலைக்கூறு, குவ்ம்.
Predicate
-2 v. ஒன்றைப்பற்றி உள்ள செய்தியை உறுதிப்படுத்து, பண்பேற்றிக் கூறு, வற்புறுத்திக்கூற, (அள.) பயனிலைமானப்படுத்து, எழுவாய்மானத்தைப் பற்றி ஒன்றினை வலியுறவாகக் கூறு.
Predicative
a. உறுதிப்படுத்துகிற, குறித்து வற்புறுத்துகிற, பயனிலைக் கூறான.
Predicatory
a. சமய உரைக்குரிய, சமய உரையாற்குறித்துக்காட்டப்பட்ட, சமயச் சொற்பொழிவாற்றுகிற.
Predict
v. வருவதுரை, குறிகூறு, முன்மதிப்பிட்டுரை.
Prediction
n. வருவதுரைத்தல்.
Predictor
n. வருவதுரைப்போர், முன்கூறுவோர், பகைவானுர்தி வரும் உயரம்-திசை-வேகம் முதலியவற்றைக் தீர்மனிக்குங் கருவி.
Pre-digest
v. முற் செரிமானமாக்கு, உணவை உண்பதற்கு முன் எளிதாகச் செரிமானமாகக் கூடியதாகச் செய்.
Pre-digestion
n. முற்செரிமானம், உணவை உண்பதற்கு முன் செயற்கையா எளிதாய்ச் செரிமானமாகக் கூடியதாகச் செய்தல்.
Predikant
n. தென் ஆப்பிரிக்காவிலுள்ள டச்சு புரோடஸ்டாண்டு திருக்கோயிலின் சமயகுரு.
Predilection
n. ஒருதலைச் சார்பு, மனச்சாய்வு, மனக்கோட்டம், ஒருதலைவிருப்பம், இயற்சார்பு.
Predispose
v. முற்சார்பூட்டு, கருத்துவகையில் முற்சாய்வுப்படுத்து, நோய்வகையில் முன்பே எளிதில் ஆளாருநிலையூட்டு, செயல்வகையில் முன்மைவூட்டு.
Predisposition
n. முற்சார்பு, முற்பரிவு, இறையருள் வகையில் முற்செவ்வி, நோய்வகையில் இயற்சார்வுநிலை.
Predominate
v. விஞ்சி மேம்பட்டிரு, பெருந்தொகையாயிரு, வலிமிக்கிரு, முக்கிய கூறாயிரு, சிறப்புப் பெற்றிரு, உயர்விடங்கொள்.
Predoom
v. முன்னதாகவே கெடுபேரிடு, முன்தீர்ப்பளி.
Pre-elect
v. முன்னதாகத் தெரிவுசெய்.