English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pretone
n. அழுத்த விசையுடைய அசைக்கு முன்னசை, அழுத்த விசையசைக்கு முன் உயிரொலி.
Pretonic
a. அழுத்த விசைக்கு முன்னசை சார்ந்த.
Pretties
n. pl. சித்திர அணிமணிகள், சிறுதிறப் பகட்டணிகள்.
Prettify
v. மேனி மினுக்கு, பகட்டிக்கொள்.
Prettily
adv. கஹ்ர்ச்சி மிக்க முறையில், ஒயிலாக, குழந்தை வழக்கில் நன்கு, நற்பண்புடன்.
Prettiness
n. மேனிமினுககு, சிங்காரப்பொருள், ஒய்யார அணிமணி, நவின்றோர்க்கினிமை.
Pretty
n. ஒயில், சிங்காரப்பண்பு, தேறற் குவளையில் சித்திரச்செய்கை, (பே-வ) குழிப்பந்தாட்டத்தில் நேரோட்டம், (பெ.) ஒயிலான, சிங்காரமான, சித்திர அழகு வாய்ந்த, கவர்ச்சி வாய்ந்த, கண்ணுக்கினிய, செவிக்கின்பமாக, நேர்த்திமிக்க, நுண்ணயம் வாய்ந்த, மிகநல்ல, பாராட்டத்தக்க, போற்றத்தக்க அளவான, மெச்சத்தக்க, (வினையடை.) நன்முறையில், போற்றத்தக்க அளவில், மட்டான அளவில், ஏறத்தாழ.
Pretzel
n. முடிச்சு வடிவ உப்புப் பிஸ்கட்டு.
Pre-university course
n. பல்கலைக்கழகப் புகுமுகத் திட்டம்.
Preux chevalier
n. இன்பநடை வீரர்.
Prevail
v. மேலோங்கு, மேம்படு, வெல், செல்வாக்குப்பெறு, வழக்கில் நீடித்திரு, நீங்காதிரு, நடப்பிலிரு, பெருவழக்காயிரு, நன்கு உகந்ததாய் அமை.
Prevalence
n. பரவியுள்ளமை, மிகுசெல்வாக்குடைமை.
Prevaricate
v. மழுப்பிப்பேசு, தட்டிக்கழிக்கும் வகையில் நடி, சொற்புரட்டுச் செய், தாக்காட்டு, இருபொருள்படப்பேசு, ஏய்த்துப் பசப்பு, (சட்.) எதிரியுடன் தொடர்பு கொண்டு தன்கட்சிக்காரரைக் காட்டிக்கொடு.
Prevenient
a. முந்திய, முன்னதாகத தடுக்கிற.
Prevent
v. தடைசெய், இடையிட்டு நிறுத்து, முன்னறிந்து தடு, வராமல் தடு, தவிர், விலக்கு, முன்னறி, முன்னறிந்து ஆவன செய், முன்னறிந்து அமைவி.
Preventer
n. தடுப்பவர், தடைசெய்பவர், இடையூறுவிளைவிப்பவர், (கப்.) பிற்சேர்ப்புக்கயிறு, மறு சங்கிலி, இணைப்புத் திருகு.
Preventive
n. தடுப்புச்செயல், தடுப்புமருந்து, (பெ.) தடுக்கக் கூடிய.
Preview
n. வௌளோட்டம், முற்காட்சி, (வினை.) முற்காண்.
Previous
a. முந்திய, முன்நிகழ்ந்த, (வினையடை.) முன்னாக, முற்பட.