English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Prize-money
n. கடற்போரில் வென்று கைப்பற்றிய பொருள்களை விற்பதால் வரும் பணம்.
Prize-ring
n. பந்தயக் குத்துச்சண்டை வட்டரங்கு, பந்தயக் குத்துச்சண்டைப் பயிற்சிக்கான வட்டரங்கம்
Pro
-1 n. (பே-வ) உடற்பயிற்சி விளையாட்டையே வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டவர், தொழிற்பயிற்சித் செவிலியர்.
Pro
-2 n. ஆதரவாளர், ஆதரவுப்பண்புக்கூறு, (வினைடை.) ஆதரவாக.
Pro forma
a. வழக்க முறைமையை ஒட்டிச்செய்யப்படுகிற, ஆசாரஞ் சார்ந்த.
Pro rata
a. தகவுக்கேற்ற, சரிசம வீதப்படியான, (வினையடை.) சரிசம விழுக்காட்டின்படி.
Pro renata
a. அப்பொழுதைக்குப் பொருத்தமான, (வினையடை.) ஏல்வைக்கு உகந்த நிலையில்.
Pro tanto
prep. அதுவரையில், அந்த அளவுவரையிலம்.
Pro tempore
prep. தற்சமயத்திற்கு, குறிப்பிட்ட வேளைக்கு.
Proa
n. மலேயாநாட்டுப் படகுவகை.
Probabiliorism
n. சான்றாதரவு மிகுதியுள்ள பக்கத்தையே பின்பற்ற வேண்டுமென்ற கோட்பாடு.
Probabilism
n. மேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு, திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை.
Probability
n. நம்பக்கூடியதன்மை, மெய்பிக்கக்கூடியது, நிகழக்கூடியது, நிகழக்கூடிய நிகழ்ச்சி.
Probable
n. கெலிப்புவாய்ப்பு வேட்பாளர், (பெ.) நிகழக்கூடிய, உண்மையாக இருக்கக்கூடிய.
Probang
n. தொண்டைச் சிக்கல் தீர்வு கருவி.
Probate
n. ஒப்பாட்சிக்குரியதாக நிறைவேற்ற உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சான்றுறுதி வாய்ந்த விருப்பாவணம், மெய்ப்பித்த விருப்பாவணப்படி.
Probation
n. தெரிந்தாயும் நிலை, முதனிலைத் தேர்வு, சமயம்புகுபவர்க்குரிய குறிப்பிட்ட கால அளவான புகுமுகத்தேர்வு நிலை, முதல்முறைக்குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனைமுறையான விடுதலை.
Probational
a. தகுதி ஆய்வுக்குட்பட்ட முதனிலைத் தேர்வின் தன்மையுடைய.
Probationary
n. தேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர், (பெ.) தகுதி ஆய்வு சார்ந்த, முதனிலைத் தேர்வு முறையான, தேர்வுமுறைக்கு உட்பட்ட.
Probationer
n. தேர்ந்தாய் நிலையினர், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முதற்குற்றவாளி அல்லது இளங்குற்றவாளி.