English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Psychotherapeutic
a. வசியத்துயில் முதலிய வழிகளால் மனநோய்க்குப் பண்டுவஞ் செய்வது சார்ந்த.
Psychotherapy
n. வசியத்துயில்முறை மருத்துவம், மயக்கி உறக்கமூட்டுவது மூலமாக நோய்க்குப் பண்டுவஞ் செய்தல்.
Psychrometer
n. ஈர உணக்கவெப்பமானி, ஈரக்குமிழுடன் ஈரநீக்கிய குமிழும் உடைய வெப்பமானி வகை.
Ptarmigan
n. காட்டுக்கோழி வகை, கோடைக்காலத்தில் கறுப்புச் சிறகுகளையும், மழைக்காலத்தில் வெண் சிறகுகளையும் உடைய கோழியினப் பறவை வகை.
Pteridologist
n. சூரல் ஆய்வுத்துறை வல்லுநர்.
Pteridology
n. சூரல் ஆய்வுநுல், பெரணி ஆராய்ச்சித்துறை.
Pterodactyl
n. மரபற்றுப்போன சிறகுடைய ஊரும் உயிர்வகை.
Pterography
n. சிறகுகள் பற்றிய விளக்கவுரை.
Pteropod
n. காலின் நடுப்பகுதி சிறுகபோல் விரிந்திருக்கும் நத்தையின் உயிர்வகை.
Pteropus
n. (வில.) நரிச்சல், பழந்தின்னும் வௌவால்.
Pterosaur
n. மரபற்றுப்போன பறக்கும் பல்லியின உயிர்.
Pterygium
n. (மரு.) சதைப்படர்த்தி, கண்ணோய் வகை.
Pterygoid
n. தாடை முனை எலும்புகளுள் ஒன்று, (பெ.) சிறகு போன்ற, தண்டெலும்புடைய உயிரினங்களில் வல்லண்ண எலும்புகளுக்குப் பின்னால் மேல்தாடையிலுள்ள இரட்டையான முளையெலும்புகள் சார்ந்த.
Ptisan, ptisan
வாற்கோதுமைக் கஞ்சி.
Ptolemaic
a. இரண்டாம் நுற்றாண்டில் வாழ்ந்த வானநுலாராகிய தாலமி சார்ந்த, கி.மு.323 முதல் கி.மு. வரையில் எகிப்தை ஆண்ட தாலமி மரபு மன்னர்களைச் சார்ந்த.
Ptomaine, ptomaine
அழிதசைநஞ்சு, அழுகும் பிணங்களிலும் காய்கறிகளிலும் உள்ள நச்சுப்பொருள் வகை.
Ptosis
n. இமைவாதம், தசையின் பக்கவாதத்தினால் கண்ணின் மேலிமை கீழ்நோக்கித் தொங்குதல்.
Pub
n. (பே-வ) பொது விடுதி.
Puberty
n. பூப்புப்பருவம், பாலின முதிர்ச்சியின் தொடக்கக் காலம்.
Pubescence
n. பூப்புப்பருவம் எய்துதல், செடிகளின் இலைகளிலும் தண்டுகளிலும் காணப்படம் மென் மயிர்த்துய், விலங்கு பூச்சிகளின் உடற்கூறுகளில் மென்மயிர்ததுய், மென்மை, மொசுமொசுப்பு.