English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pud
n. (பே-வ) குழந்தையின் கை, விலங்குகள் சிலவற்றின் முன்னங்கால்.
Puddening
n. (கப்.) உராய்வுத்தடைக் கயிற்று மெத்தை.
Pudding
n. களி, கூழ், புற்கை, கூலவகையின் மாவு-குருதி முதலியவை திணிக்கப்பட்ட பன்றி முதலியவற்றின் குடற்கறி, களிபோன்ற பொருள், (கப்.) உராய்வுத் தடைக் கயிற்றுமெத்தை.
Pudding-cloth
n. களி வேகவைக்குந் துணி.
Pudding-head
n. மட்டி, மடையன்.
Pudding-stone
n. கூட்டுக்கலவைப்பாறை.
Puddle
n. குட்டை, சேற்றுமடு, (பே-வ) குழப்பம், தாறுமாறான நிலை, மண்ணடை, அணை-கரை முதலியவற்றில் நீர் புகாதவாறு பூசப்படும் மணல் கலந்த குழைசேறு, (வினை.) குட்டையில் அளை, சேற்றுமடுவில் புரள் தூய்மையற்ற துறைகளில் ஈடுபடு, நீரைக் கலக்கிச் சேறாக்கு, செய்தியைக் குழப்பு, களிமண்ணையும் மணலையுங் கலந்து பிசைந்து குழைசேறாக்கு, கால்வாய் முதலியவற்றின் கரைகளுக்குக் குழைசேறு பூசு, தேனிரும்பாக்குதற்காக உருகிய இரும்பைக் கலக்கு.
Puddly
a. குட்டைகள் நிறைந்த.
Pudency
n. அடக்கம், நாணம்.
Pudendal, a,.
மறையுறுப்புக்கள் சார்ந்த.
Pudendum
n. மறை உறுப்பு, பாலினற் புற உறுப்பு.
Pudge
n. (பே-வ) கட்டை குட்டையானவர், கொழுத்துக் குறுகிய விலங்கு.
Pudgy
a. கட்டை குட்டையான, கொழுத்துக் குறுகிய.
Pudsy
a. கொழுத்த, உருண்டு திரண்ட.
Pueblo
n. ஸ்பானிய அமெரிக்க பகுதிகளில் சிற்றுர், ஸ்பானிய அமெரிக்க பகுதிச் செவ்விந்தியர்களின் குடியிருப்பு.
Puerile
a. சிறுபிள்ளைத்தனமான, விளையாட்டுப் புத்தியுள்ள, சிறுதிற, பயனற்ற.
Puerility
n. சிறுபிள்ளைத்தனம், சிறுபிள்ளைத்தனம் வாய்ந்த செயல், அற்பச்செயல், மதலைச்சொல், அறிவற்ற சிறுதிறச்செயல்,மடமை.
Puerperal
a. பிள்ளைப்பேறு சார்ந்த, பிள்ளைப்பேற்றின் விளைவான.
Puff
n. மோதுஞ் சிறு காற்றலை, திடீர்க்காற்று வீச்சு, குற்றுயிர்ப்பு வீச்சு, காற்றின் சிற்றலை வீச்சொலி, சிறு மூச்சொலி, வௌதயேற்றப்படும் புதைக்கற்றை, ஆடைஒப்பனை மடிப்பலை, மயிர் ஒப்பனை அலைச்சுருள்,ஒப்பனைத் துகள் ஒத்தும் இழைச்செண்டு, பொடிச்செண்டு, மாவினாற்செய்த பொங்கப்பம், செய்தித்தாள்களில் வாணிகப் பண்டங்களை மிகைபடப் புகழும் விளம்பரம், பக்கச்சொல். வீண்பாராட்டுரை, (வினை.) ஊது,மூச்சு அலை வௌதவிடு, காற்றுவகையில் அலைவீசு, அசைப்பிடு, விட்டுவிட்டு எழு, முசுமுசுப்புக்கொள், இடர்ப்பட்டு மூச்சுவிடு, மூச்சுத் திணறவை, நீராவிப்பொறிவண்டி வகையில் 'குப்' 'குப்' என்று புகைவிடு, 'குப்' 'குப்' என்று புகைவிட்டுக்கொண்டே செல், சுருட்டு முதலியவற்றின் வகையில் புகை ஊதித்தள்ளு, புடை, வீங்கு, வீக்கங்கொள், தற்பெருமையால் பூரிப்புக்கொள்வி, மிகைபடப்பேசு, பொய்யாகப் புகழ்ந்து விளம்பரஞ் செய், ஏலத்தில் விலை உயர்த்துவதற்காகக் கேள்வி கேள்.