English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Puissant
a. சக்தி வாய்ந்த.
Puja
n. பூசை, வழிபாடு, திருவிழா.
Puke
n. வாந்தி, (வினை.) வாந்தியெடு.
Pulchritude
n. அழகு, வனப்பு.
Pule
v. கிறீச்சிட்டு அழு, இனை, சிணுங்கு.
Pull
n. இழுப்பு, வலிப்பு, வெட்டியிழுப்பு, தென்னுகை, இசிப்பு, இழுப்புவிசை, ஈர்ப்பாற்றல், செல்வாக்காற்றல், மேலிட ஆதரவு வலிமை, கடிவாள இழுவை, பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு, வலிந்த படகுகைப்பு, மதுவகையில் நீள்குடியளவு, கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு, பற்றுகைப்பிடி, அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி, பந்தாட்ட வகையில் பின்விசையடி, ஆக்கநலம், சாதகமான நலம், (வினை.) இழு, பற்றி ஈர், பிடுங்கு, கிள்ளியெடு, கவர்ந்து ஈர், ஈர்த்துக்கொள், முனைந்து உழல், இழுத்துச்செல், உறிஞ்சு, மொண்டுகொள், சோர்த்து எடு, வார்த்துக்கொள், பறித்தெடு, மணியை இழுத்தடி, படகுஉகை, தண்டுவலி, வலிந்து துடுப்புத்தள்ளு, படகுவகையில் உகைக்கப்பெறு, பற்றிக்கிழி, உடல்நலங் கெடு, கோட்டு, முகம் வகையில் கோணலாக்கிகொள், கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு, திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு, கைதுசெய், சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து, குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு, தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள், முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள், ஒருதிசைப்பட்ட சார்பூட்டு, ஆதரவை வலிந்துபெறு, செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு, வாரிவிடு, வீழ்த்து, அழி, குற்றங்காண், குறைப்படுத்து, பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி, குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை, செயல் வலுக்குறை, மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு.
Pull-back
n. தடங்கல், தடைப்படுத்துங் கூறு, தொங்கல்தாங்கி, மகளிர் ஆடைத்தொங்கலை எடுத்துச் செருகுவதற்கான அமைவு.
Pull-down menu
கீழ்விரிப்பட்டியல்
Pulled
a. உடல்நலமிழந்த, ஊக்கங் குறைந்த.
Puller
n. இழுப்பவர், துடுப்பிழுத்துப் படகு செலுத்துபவர், பந்தடிப்பவர், இழுப்பது, இழுப்பதற்கான கருவி, இழுக்கும் இயந்திரம், கடிவாளம் மீறி இடக்குச்செய்யுங் குதிரை.
Pullet
n. இளம் பெட்டைக்கோழி.
Pulley
n. உருளை, கப்பி, பாரஞ்சாம்பி, (வினை.) கப்பிமூலந் தூக்கு, கப்பி அமைத்து இணை, கப்பியால் வேலைசெய்.
Pullicate
n. வண்ணக் கைக்குட்டை, வண்ணக் கைக்குட்டை நெய்வதற்கான மூல இழைமப்பொருள்.
Pullman, Pullman car
n. இரயில் தனிவசதிப் பெட்டி.
Pull-out
n. விளிம்பொட்டு இதழ், ஒத்துப்பார்வையிடுவதை எளிதாக்கும் பொருட்டுச் சுவடித்தாள்களின் முப்ப்பு விளிம்பிலிருந்து விரியும் பக்கம்.
Pull-over
n. கம்பளிச்சட்டை, கம்பளித் தலைச்சீரா.
Pull-through
n. சுழல் துப்பாக்கிக் குழல் துப்புரவுத் தூரிகை.
Pullulate
v. தண்டு வகையில் தளிர், அரும்புவகையில் முகிழ்வுறு, அரும்பிடு, விதை வகையில் முளை, கோட்பாடு வகையில் தோன்று, தழைத்தோங்கு.
Pull-up
n. பயணிகள் இடைத்தங்கல் மனை, திடீர் நிறுத்தம், இழுத்து நிறுத்தம்.