English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pulsometer
n. நீராவியைச் செறியவைப்பதற்கான வளிதீர்குழல்.
Pultaceous
a. வீக்கமருந்துக் களிபோன்ற, கூழான.
Pultan
n. காலாட்படை வகுப்பு.
Pulverize
v. தூளாக்கு, பொடியாக்கு, இடி, அரை, நீரைத்திவலைகளாகச் சிதறு, இடித்து அழி, நொறுக்கு, தகர்வுறு, நொறுங்கு, தூளாகு.
Pulverizer
n. தூளாக்குபவர், பொடிக்கும் இயந்திரம், சிதறு கருவி.
Pulverulent
a. பொடியான, தூள் சார்ந்த, பொடி போர்த்த, பாறை வகையில் நொறுங்கிவிடக்கூடிய, தன்னிணைவாற்றல் குன்றிய.
Pulvil
n. வாசனைத் தூள், பொடி.
Pulvinate
a. (தாவ., பூச்.) புடைப்பான, அதைப்புள்ள, மேற்கவிவான, திண்டுபோன்ற, திண்டுபோல் மெத்தென்ற.
Pulvinated
a. (க-க) போதிகை வகையில் குவிமுகத்துடன் புடைத்திருக்கிற.
Pumice
n. மெருகு மாக்கல்வகை, படிகக் கல், சிட்டக்கல், (வினை.) மாக்கல்கொண்டு தேய், சிட்டக்கல்லால் துப்புரவு செய்.
Pump
-1 n. நீர்வாங்கு குழாய், காற்றழுத்த ஆற்றல்மூலம் நீரை மேலெழச் செய்யும் விசைக்குழாய், நீர்ம மட்டம் உயர்த்துவதற்கான விசைக்குழாய்ப்பொறி, நீர்மம் இயக்கவதற்கான குழாய்ப்பொறி, வளியழுத்தம் கூட்டவோ குறைக்கவோ பயன்படுத்தப்படும் குழாய்ப்பொறி, இதயம், குருதி, விசையியக்க
Pump
-2 n. குழாய்ச்செருப்பு, கட்டுப்போடாத புதைமிதிவகை.
Pumpernickel
n. செர்மன் நாட்டுக் கூலவகை ரொட்டி.
Pump-room
n. கனிப்பொருள் நீருற்றுகளிலிருந்து மக்கள் குழாய்வழி நீரைக் குடிப்பதற்குரிய அறை.
Pun
-1 n. சிலேடை, சித்திரப்பேச்ச, (வினை.) சிலேடையாகப் பேசு.
Pun
-2 v. அறை, குத்தியிடித்து நிலத்தை உறுதிப்படுத்து, திமிசுக்கட்டையால் இடி.
Puna
n. தென் அமெரிக்காவின் வடபகுதியிலுள்ளஉயரமான பாழ்மேட்டுப்பகுதி, காற்றழுத்தக் குறைவு காரணமாக ஏற்படும் கடுமூச்சுக் கோளாறு.
Punch
-1 n. தன்ரூசி, தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிடுங் கருவி, தாழ்செறிபொறி, தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி, செறிவழுத்தப்பொறி, ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு, வெட்டழுத்தப்பொறி, பொறிப்பாணி, வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழ