English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pungency
n. உறைப்பு, காரம், எரிச்சல், நெடி, குத்தலான கேலி, வன்சொல்.
Pungent
a. காரமான, உறைப்பான, மணவகையில் மூக்கைத் துளைக்கிற, கேலி வகையில் குத்தலான, கண்டன வகையில் கடுமையான, உணர்ச்சியைத் தூண்டுகிற, எரிச்சலுட்டுகிற, (இய., தாவ.) கூரியமுனையுடைய.
Punic
n. பண்டைய, கார்த்தேஜ் மக்களின் செமித்திய இன மொழி, (பெ.) கார்த்தேஜைச் சார்ந்த.
Punice
n. மூட்டைப்பூச்சி.
Punish
v. தண்டி, தண்டனை அளி, தண்டத்தொகைவிதி, அடி, ஒறு, ஓட்டப்பந்தயத்தில் எதிர்ப்பக்கத்தாரைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கு, (பே-வ) குத்துச்சண்டையில் எதிரிக்குக் கடுமையான அடிகொடு, உணவுவகையில் பெரிய அளவு உட்கொண்டுவிடு, பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கப்ப்நதாட்ட வலுக்கேட்டை முழுதும் பயன்படுத்திக்கொள்.
Punishment
n. தண்டனை, ஒறுப்பு, தண்டத்தொகை, தண்டவரி.
Punitive
a. தண்டிக்கிற, தண்டனையாக விதிக்கப்படுகிற, தண்டனை இயல்புடைய.
Punk
-1 n. விலைமகள், பரத்தை.
Punk
-2 n. மக்கிய மரம், மரக்கட்டைமீது வளருங் காளான், தீக்கொளுத்து குச்சி, பயனற்ற பொருள், குப்பைகூளம், (பெ.) பயனற்ற, அழுகிய.
Punka,punkah
விசிறி, பங்கா, இழுப்புவிசிறி.
Punner
n. அறைகருவி, கம்பத்தைச்சுற்றி மண்ணை இடித்து நிலத்தை உறுதியாக்கப் பயன்படுங் கருவி.
Punnet
n. குடுவை, பெட்டி, பழக்கூடை.
Punt
-1 n. பரிசல், (வினை.) பரிசல் தள்ளு, பரிசல் வழி அனுப்பு.
Punt
-2 n. நிலம்பாவாப் பந்தடி, காற்பந்தாட்டப் பந்துகையிலிருந்து கீழே விழுந்து நிலத்தைத் தொடுமுன் காலால் உதைத்தல், (வினை.) நிலம்பாவாப் பந்தடி அடி.
Punt
-3 n. சீட்டாட்ட வகையில் பொருள் வைப்புக்கெதிராகப் பணையம் வைத்து ஆடுபவர், சீட்டாட்டடவகைக் கெலிப்பெண், (வினை.) சீட்டாட்ட வகையில் பொருள்வைப்புக்கு எதிராகப் பணையம் வை, (பே-வ) குதிரைமீது பந்தயங் கட்டு.
Punt-about
n. பந்துதைப்பயிற்சி, உதை பயிற்சிப்பந்து.
Punter
n. சூதாட்டக்காரர்.
Punty
n. ஊதுகம்பி, ஊதிக் கண்ணாடிப்பொருட்களை உருவாக்குவதிற் பயன்படுத்தப்படும் இரும்புக்கம்பி.