English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Puny
a. குறிய, மிகச்சிறிய, உருவில் குள்ளமான, வலிமையற்ற, நுண்ணிய, நொய்ம்மையான, அற்பமான, சிறுதிற.
Pup
n. நாய்க்குட்டி, (வினை.) ஈனு, குட்டிபோடு.
Pupa
n. முட்டைப்புழுக்கூடு, பூச்சியினத்தின் பருவச் செறிதுயிற்கூடு.
Pupate
v. பூச்சியினப் பருவ வகையில் முட்டைப்புழுவாகு.
Pupil
n. பள்ளிமாணவர், பாடங்கற்பவர், கண்ணின்மணி, பாவை.
Pupilage
n. உரிய வயது அடையாதிருக்கும் நிலை, பள்ளச் சிறுவனாயிருக்கும் நிலை, ஆதரவுநிலை, இளங்தண்மை, மொழிநாடு வகையில் சிறுபான்மை நிலை.
Pupilary
a. கண்மணி சார்ந்த, கண்பார்வைக்குரிய, பள்ளிச் சிறுவருக்குரிய, இளங்கணாளருக்குரிய, பள்ளிக் கட்டுப்பாட்டுற்கு உட்பட்ட.
Pupilize
v. மாணவர்களுக்குக் கற்பி, பாடம் பயிற்று.
Pupil-teacher
n. சட்டாம்பிள்ளை, மாணவ ஆசிரியர், தான் பயிற்சி பெற்றுக்கொண்டே பிற மாணவருக்கக் கற்பித்துப் பழகும் ஆசிரியர்.
Pupiparous
a. (பூச்.) கூட்டுப்புழு நிலையிலே கருவுயிரை ஈனுகிற.
Puppet
n. கூத்தாட்டுப் பொம்மை, பிறர் கைப்பாவை.
Puppet-play, puppet-show
n. பொம்மலாட்டம், பாவைக் கூத்து.
Puppet-valve
n. புடை இணைப்பில்லாத தூக்கு தடுக்கிதழ்.
Puppy, puppy-dog
நாய்க்குட்டி, அறிவற்ற இளைஞன், தற்பெருமைக்காரன்,பகட்டன், முட்டாள்.
Purbeck
n. கடினமான சுண்ணாம்புக்கல் வகை.
Purblind
a. அரைக்குருடான, கண் மங்கலான, மழுங்கலான, அறிவுக் கூர்மையற்ற, ஆன்மிகத்தொலைநோக்கமற்ற, (வினை.) அரைக் குருடாக்கு, மழுங்கலாக்கு, அறிவு மழுங்கச்செய்.
Purchase
n. கொள்வினை, விலையிற் கொள்ளல், கொள்முதல் சரக்கு, விலைக்கு வாங்கிய பொருள், பொறி ஆதாயம், பொறி ஆதயந் தருங்கருவி, நிலத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம், (வர.) படைத்துறையிற் பணம் கொடுத்து ஆணைப்பதவி பெறும் பழக்கம், (சட்.) நில ஈட்டு மானம், மரபுவழி பெறாமல் தன்முயற்சியாற் பெற்ற நிலஉடைமை, (வினை.) வாங்கு, விலையிற்கொள், முயன்று பெறு, (கப்.) கப்ப-நெம்பு முதலியவற்றின் உதவியால் நங்கூரம் எழுப்பு.
Purchase-money
n. கொள்முதல் விலை, பொருள் பெறக் கொடுக்கப்படவேண்டும் விலை.