English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pensive
a. எண்ணத்தில் ஆழ்ந்துள்ள, சிந்தனையில் மூழ்கிய, வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய.
Pent
a. அடைத்து வைக்கப்பட்ட, அடக்கி வைக்கப்பட்ட.
Pentachord
n. முல்லையாழ், ஐந்து நரம்புகளுள்ள இசைக்கருவி, முல்லைப்பண், ஐந்து சுரங்கள் கொண்ட இசைத்தொடர்.
Pentacle
n. செப்படி வித்தையில் அடையாளக் குறியாகப்பயன்படுத்தப்படும் உருவம்.
Pentad
n. ஐந்து, ஐந்தன் இலக்கம்,ஐந்தன் தொகுதி, ஐந்து நாட்கள் கொண்ட காலப்பகுதி, (வேதி.) ஐயிணை திறத் தனிமம், ஐந்து நீரக அணுக்களுடன் இணையும் ஆற்றல் கொண்ட தனிமம்.
Pentadectyl
n. கைகால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ளவர், கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ள விலங்கு, (பெ.) ஒவ்வொரு காலில் அல்லது கையில் ஐந்து விரல்கள் கொண்ட, கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களையுடைய விலங்குகளைப் பற்றிய.
Pentagon
n. ஐங்கோணம், ஐந்து பக்கங்களுள்ள உருவம்.
Pentagram
n. ஐந்து முனைகளுள்ள விணமீன் வடிவம், ஐந்து மூலைகள் கொண்ட விண்மீன் வடிவில் அமைந்த மறைவியல் உரு.
Pentagynous
a. மலர்வகையில் ஐந்து சூலகங்கள் கொண்ட.
Pentahedron
n. ஐந்து முகப்புக்கள் கொண்ட பிழம்புரு.
Pentamerous
a. (தாவ.) இதழ் வட்டகைகளை ஐந்தாக உடைய, (வில.) ஐந்து இணைப்புகள் கொண்ட.
Pentameter
n. (யாப்.) ஐஞ்சீரடி.
Pentandrous
a. ஐந்து தனிப்பூவிழைகள் கொண்ட.
Pentane
n. நில எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் நீர்மக்கரியவகை.
Pentapetalous
a. ஐந்து இதழ்களையுடைய.
Pentapody
n. ஐந்து சீர்கள் கொண்ட செய்யுள் அடி, ஐஞ்சீரடிச் செய்யுள்.
Pentastich
n. செய்யுளின் ஐந்தடித்தொகுதி.
Pentateuch
n. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மோசே என்பாருக்கு உரியதாகக் கருதப்பட்ட முதல் ஐந்து ஏடுகள்.
Pentathlon
n. பண்டைக்கிரேக்கர் பயிற்சி விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளும் அனைவரது ஐந்து நிகழ்ச்சித் தொகுதி, தற்கால ஒலிம்பிக் பந்தயங்களில் ஐந்து ஆட்டத்தொகுதி.