English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pen-name
n. எழுத்தாளரின் புனைபெயர்.
Pennant
n. (கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறுகயிறு, கீழ்ப்புரத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுல்ன் கூடிய சிறு கயிறு, நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறையின் அடையாளக் கொடி, ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி, கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி, கொடி.
Penniform
a. (வில., தாவ,) இறகுபோன்ற வடிவமுடைய, தூவியின் தோற்றமுடைய.
Penniless
a. காசில்லாத, கைப்பொருளற்ற, ஏழ்மையான, துணையற்ற.
Pennill
n. யாழ்போன்ற இசைக்கருவியோடு பாடுவதற்காகச் சமயத்திற்கேற்றபடி அமைக்கப்பட்ட பாட்டு, பண்டை வேல்ஸ் மக்களின் கவியரங்கத்திற் பாடப்படும் ஆசுகவி.
Pennon
n. நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறைப் பிரிவின் அடையாளக் கொடி, ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி, கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி, கொடி.
Penny
n. ஆங்கில நாட்டுச் செப்புக்காக, (பே-வ.) சிறு நாணயம், சிறகாசு.
Penny-a-line
a. எழுத்து வகையில் மேற்போக்கான, மலிந்த தரமான.
Penny-a-liner
n. குறைந்த கூலிக்கு அளவுமீறி உழைத்து எழுதுபவர்.
Pennyroyal
n. மூலிகையாகப் பயன்படும் புதினா இனச்செடிவகை.
Penny-wedding
n. மணமக்களை மனைப்படுத்த விருந்தினர் காசுதரும் திருமணவினை.
Penny-weight
n. இருபத்துநான்கு குன்றிமணி எயைளவு.
Pennywort, wall pennywort
n. சதுப்புநிலங்களில் வளரும் வட்ட இலைச் செடிவகை.
Pennyworth
n. ஒரு செப்பு நாணயத்தில் வாங்கக்கூடியது, ஒரு செப்புக்காசு மதிப்புள்ளது.
Penology
n. தண்டனை ஆய்வுநுல், சிறைநிர்வாகம்.
Pensile
a. தொங்கிக்கொண்டிருக்கிற, பறவைகள் வகையில் தொங்குகூண்டு கட்டுகிற.
Pension
n. ஓய்வுகால ஊதியம், உரிமை துறப்புக்கீடான உதவிச்சம்பளம், பரிவூதியம், துணைமை ஊதியம், அன்புதவி, 'கிரே விடுதி' என்ற சட்ட மாணவர் இல்ல ஆய்வுப்பேரவை, ஐரோப்பாவில் உணவு விடுதி, (வினை.) ஓய்வுச் சம்பளம் கொடு, உதவிச்சம்பளம் கொடுத்து வசமாக்கிக் கொள், உதவிச்சம்பளம் கொடுத்து விலக்கு.
Pensionable
a. பணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய, ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய, பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற.
Pensionary
n. ஓய்வூதியம் பெறுபவர், உடைமையுரிமை ஓய்வூதியத்தில் இழந்தவர், (பெ.) ஓய்வுச் சம்பள இயல்புடைய.
Pensioner
n. ஓய்வுச்சம்பளம் வாங்குபவர், உதவிச்சம்பளம் பெறுபவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுக்கும் விடுதிக்கும் உதவிச்சம்பளம் பெறாமல் சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தும் மாணவர்.