English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Penance
n. நோன்பு, தவம், கழுவாய், கழுவாய்க்காகத் தன்னை ஒறுத்தல், (வினை.) கழுவாய் விதி, பிராச்சித்தங் கூறு.
Pen-and-ink
n. எழுது பொருள்கள், பேனாப்படம், (பெ.)மையும் பேனாவுங் கொண்டு எழுதுப்பட்ட.
Penates
n.pl. ரோமர் குலதெய்வங்கள்.
Pence
n.pl. ஆங்கில நாட்டுச் செப்புக்காசுகள்.
Penchant
n. விருப்பம், மனச்சார்பு.
Pencil
n. வரைகோல், கரிக்கோல், வண்ண ஓவியத்தூரிகை, தீட்டுப்பாணி, வண்ண ஓவியப்பாணி, (இய.) குவிகதிர்க்கூம்பு, (வடி.) வரைக்கூம்பு, ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள், (வினை.) வரைகோலாற் குறி, கரிக்கோலால் தீட்டு, பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய், வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை.
Pencil-case
n. வரைகோல் உறை.
Pendant, pendent
பதக்கம், கழுத்தணியிற் நோக்கப்பட்டுள்ள தொங்கணி, (கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறு கயிறு, கீழ்ப்புறத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுடன் கூடிய சிறுகயிறு, கைக்கடிகார வளையம், இணைதுணை, சோடி, எதிரிணை, (பெ.) தொங்குகிற, மேற்கவிந்து தொங்குகிற, உறுதியற்ற, முடிவுபெறாத, நிறைவேறாத, முடிவுக்காகக் காத்திருக்கிற.
Pendentelite
adv. வழக்கு முடிவதற்கிடையே.
Pendentive
n. (க-க) கவிகை மாடத்தின் சதுரவிளைவு தாங்கி அடித்தளத்துக்குரிய உருணை முக்கோண வடிவுடைய குவிகால்.
Pending
a. முடிவு செய்யப்படாத, முடிவிற்காகக் காத்துள்ள, விரைவில் முடிவுசெய்யப்பட இருக்கிற, முடிவு செய்யப்படும் வரையில், முடிவு செய்யப்படுவதற்கிடையில், முடிவு செய்யப்படும் வகையில்.
Pendragon
n. பண்டைய பிரிட்டிஷ் குறுநில மன்னர்.
Pendulate
v. ஊசலாடு, ஊசற்குண்டு போலாடு, தீர்வு பெறாதிரு, முடிவுறாதிரு.
Penduline
a. கூண்டு வகையில் தொங்குகிற, ஆடிக்கொண்டிருக்கிற, பறவை வகையில் தொங்குகூண்டு கட்டுகிற.
Pendulous
a. தொங்கலான, பறவைக்கூண்டு-மலர் முதலியவற்றின் வகையில் ஊசலாடுகிற.
Pendulum
n. ஊசற் குண்டு, மணிப்பொறியின் ஊசலி, ஊசலாடும் ஆள், ஊசலாடும் பொருள்.
Penelope
n. பத்தினி, யூலிசிஸ் மனைவி.
Penelopise
v. செய்ததை அழித்துச் செய்.
Peneplain
n. (மண்.) குறிஞ்சி மருதத்திரிபு.
Penertrating
a. நுழைநோக்குடைய, துளைத்துச் செல்கிற, உண்ணோக்குடைய, மற்ற ஓசைகளையும் விஞ்சி எளிதாகக் கேட்கிற.