English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Perpetrate
v. குற்றஞ் செய், செய்யுள் வகையில் இயற்று,சிலேடை வகையில் அமை.
Perpetual
a. நிலையான, என்றுமுள்ள, மன்னும் நிலையதான, தொடர்ச்சியான, (பே-வ) அடிக்கடி நிகழ்வதான.
Perpetuate
v. நிலைபேறுடையதாக்கு, என்றும் இயங்கச்செய், நீடித்திருக்கச்செய், மறக்கப்டாமற்பேணு.
Perpetuation
n. நிறைபேறாக்கம், முடிவில் தொடர்ச்சி, என்றென்றும் காத்துப்பேணுகை, நெடுநீள் தொடர்ச்சி, நெடுநீள் காலம் பேணுகை.
Perpetuity
n. நிலைப்பாடு, நிலைபேறு, நிலைத்திருக்குந்தன்மை, எல்லையில் காலம், வரையறுக்கப்படாக் கால எல்லை, என்றுமுள்ளது, நிலையான உடைமை, நிலையான பதவி, நிலையான ஆண்டுப்படி, நிலையான ஆண்டுப்படிக்குரிய மூலதனத்தொகை.
Perplex
v. குழப்பமடைவி, திகைப்பூட்டு, சிக்கலாக்கு, சிக்கவை, பின்னிக்கொள்.
Perplexity
n. தடுமாற்றம், மனக்குழப்பம், இரண்டகநிலை, தடுமாற்றம் உண்டுபண்ணுவது, சிக்கலான நிலை.
Perprep.
வழியாக, மூலமாக, ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொருவருக்கும், அளவுக்கு.
Perquisite
n. இடை ஆதாயம், தற்செயலாகக் கிடைத்த மிகைப்பேறு, சுதந்திரம், பணியாளர் சேதாரப்பொருளுரிமை, வாடிக்கைக் கையுறை, (சட்.) முறையான வருமானத்துக்கு மேற்பட வரும் பண்ணை முதல்வர் ஆதாயம்.
Perron
n. வாயிற்படி மேடை.
Perry
n. பேரிப்பழத் தேறல்வகை.
Persecute
v. வாட்டு, கொள்கைவேறுபாடு காரணமாகத்துன்புறுத்து, அடக்குமுறை அட்டுழியங்களுக்கு ஆளாக்கு,இடர்ப்படுத்து, முறைகடந்து, வருத்து, தொந்தரவு கொடு.
Persecution
n. அடக்குமுறை அட்டுழியம், விடாத்துயரளிப்பு.
Persecutor
n. வருத்துவோர், ஆரஞர் தருவோர்.
Perseverance
n. விடா முயற்சி, ஆள்வினையுடைமை, சமயத்துறையில் திருவருளுக்கு ஆட்பட்ட நிலையில் இருந்து வருதல்.
Persevere
v. விடாமுயற்சியுடன் செயலாற்று, உஞற்று.
Persian
n. பெர்சிய நாட்டவர், பெர்சிய மொழி, (பெ.) பெர்சிய நாடு சார்ந்த.
Persiennes
n.pl. எளிய கிடைச்சட்டங்களுடன் கூடிய வௌதப்புறப் பலகணித் திரைகள்.
Persiflage
n. ஏளனப்பேச்சு, இலேசான வசவு.
Persimmon
n. அமெரிக்க வகை ஈச்சம்பழம்.