English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Phyllophagous
a. தழையுணியான, இலைகளைத் தின்று வாழ்கிற.
Phyllopod
n. தழைக்காலி, இலைபோன்ற கால்களையுடைய நத்தையின் உயிர், (பெ.) இலைபோன்ற கால்களையுடைய.
Phyllostome
n. தழைமூஞ்சி வாவல், இலைபோன்ற மூக்கினையுடைய வௌவால்.
Phyllotaxis
n. இலையடுக்குமுறை.
Phylloxera
n. செடிப்பேன் இனம், கொடிமுந்திரிச்செடியை அழிக்கும் பூச்சுவகை.
Phylogenesis, phylogeny
விலங்கு அல்லது செடிவகையின் இனவளர்ச்சி, விலங்கு அல்லது செடிவகையின் இனவரலாறு.
Phylum
n. (உயி.) விலங்கு அல்லது செடிவகையின் இனப்பெரும்பிரிவு.
Physic
n. நோய்தீர்க்குங் கலை, பண்டுவம், மருத்துவத் தொழில், (பே-வ) மருந்து, (வினை.) மருந்துகொடு.
Physical
a. இயற்பொருள் சார்ந்த, சடப்பொருள் தொடர்பான, இயற்பியல் சார்ந்த, இயற்பியல் விதிகளுக்கிணங்கிய, உடல்சார்ந்த.
Physician
n. மருத்துவர், மருத்துவத்திலும் அறுவையிலும் சட்டப்படித் தகுதி பெற்றவர், நோய்தீர்ப்பவர், கோளாறு அப்ற்றுபவர், தீங்கு நீக்குபவர்.
Physicism
n. இயற்பொருட் கோட்பாடு, வெறும் இயற்பொருள்களே அல்லது சடப்பொருள்களே உண்மையானவை என்னுங்கோட்பாடு.
Physicist
n. இயற்பியல் ஆய்வுத்துறை மாணவர், இயல்நுல் மாணவர், உயிரின் இயற்பொருள் தோற்றக் கோட்பாட்டாளர்.
Physicky
a. மருந்துபோன்ற, மருந்தினை நினைவூட்டுகிற.
Physics
n.pl. இயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை.
Physiocracy
n. இயலாட்சி, இயற்கை முறைக்கு ஒத்த அரசு.
Physiocrat
n. இயலாட்சி ஆதரவாளர், இயற்கை முறைக்கு ஏற்றதான அரசாட்சி வேண்டுமென்பவர்.
Physiogeny
n. உயிரியக்கச் செயற்பாடுகளின் தோற்ற வளர்ச்சி வரலாறு.
Physiognomy
n. உறுப்பமைதி இயல், சாமுத்திரிகம், முகத்தோற்றங்களிலிருந்து அல்லது உடலமைப்பிலிருந்து ஒருவர் குணத்தையறியுங் கலை, உறுப்புக்களின் அமைதி, முக அமைப்பு, (பே-வ) முப்ம், நாடு முதலியவற்றின் புறவியல்புகள், சிறப்புக்கூறு, முனைந்த சிறப்புப்பண்பு.
Physiography
n. இயற்கையமைப்பின் விளக்கம், இயற்கைத் தோற்றங்களின் வருணனை, பொருட்டொகுதிகளின் விவரக் குறிப்பு, இயற்கையமைப்புக்களைப் பற்றிக் கூறும் நிலவியல்.
Physiolatry
n. இயற்கை வழிபாடு.