English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Placate
v. இணக்குவி, சாந்தப்படுத்து.
Place
n. இடம், வௌதயிடம், முற்றம், நிலம், நிலப்பகுதி,நகர், ஊர், கிராமம், மனை, கட்டிடம், தங்கிடம், உறையுள், இருக்கை, பரப்புக்கூறு, பிழம்புக்கூறு, உடலின் பகுதி, ஏட்டின் கூறு, பணியிடம், பதவி, சமுதாயப்படி, படிமுறை, தரம், உரிமையிடம், உரியபடி, தகவிடம், கடமை, உரியநிலை, நேர்நிலை, தகுதிப் படிவரிசை, வாதப்படிவரிசை, (கண.) எண்தானம், பதின்முறைப்படித்தானம், (வினை.) வை, இடத்தில் அன்ர்வி, ஒழுங்குபடுத்திவை, சரியான இடத்தில் வை, குணங்குறை மேவுமி, பணியில் அமர்த்து, பணி அமர்த்திக்கொடு, பணத்தை முதலீடுசெய், சரக்குகளை வாடிக்கைக்காரர்களிடம் ஒப்படை, சரக்குகளின் அனுப்பாணை சேர்ப்பித்து விடு, நம்பிக்கை வை, இடம் குறித்தமை, வரிசையிடம் வகுத்தமை, இடம்குறித்துணர், நினைவில் குறித்துணர், இனம் கண்டறி, பந்தயத்தில் முதல் மூன்றினுள் ஒன்றாகக் குறி, இலக்குநோக்கி வைப்புப்பந்தினை அடி.
Placebo
n. மாண்டவர் மீழ்ன வழிபாட்டுப்பாடலின் முதல் எதிரிசைப்பு, அந்திக்கால மருந்து.
Place-brick
n. காய்ச்செங்கல், சூளையில் காற்றுப்பக்கமாய் இருந்ததனால் அரைறை வேக்காடுடைய செங்கல்.
Place-kick
n. வைப்புப்பந்தடி.
Placeman
n. காதன்மை அலுவலர், மேலவர் தன்னலஆதாயங்கருதி அன்ர்த்திய பணித்துறைவர்.
Placenta
n. நச்சுக்கொடி, (தாவ.) சூலகத்தின் கருவக ஒட்டுப்பகுதி.
Placental
a. நச்சுக்கொடி சார்ந்த.
Placer
n. கனிவளங் காணத்தக்க ஆற்றின் வண்டற்படிவு.
Placet
n. பிடித்தம், விருப்பம், (வினை.) எனக்குப் பிடித்தமாயிருக்கிறது.
Placid
a. அமைந்த, மெல்லமைதிவாய்ந்த, விழுமிய வீறமைதிமிக்க.
Placidity
n. மெல்லமைதி, ஆர்ந்தமைந்த தன்மை.
Placket
n. பெண்டிர் பாவாடை உட்பை.
Placket-hole
n. பெண்டிர் பாவாடையின் உட்பைவாய்.
Placoid
a. செதிள் வகையில் தகடுபோன்ற, மீன் வகையில் தகடுபோன்ற செதிள்களையுடைய.
Plafond
n. மச்சடி, சித்திரம் வரைந்த அறைமுகடு, அறைமுகட்டோ வியம்.
Plagal
a. (இசை.) ஐந்தாம் நரம்புக்கும் அதன்மேற்கேள்விக்கும் இடைப்பட்ட குரல்களையுடைய.
Plage
n. நடப்புநயக் கடற்கரை.
Plagiarism
n. எழுத்துத் திருட்டு, கருத்துத் திருட்டு.
Plagiarist
n. எழுத்தினைக் களவாடுபவர், கருத்தினைக் களவு செய்பவர்.