English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Recitig
n. ஒப்புவிப்பு, (பெயரலடை) ஒப்புவிக்கிற.
Recivilization
n. மீட்டும் நாகரிகப்படுத்துதல்.
Recivilize
v. திரும்பவும் நாகரிகப்படுத்து.
Reck
v. (செய்) அக்கறைகொள், கவலைப்படு, கவனஞ் செலுத்து, பொருட்படுத்து, பொருட்டாயிரு.
Reckless
a. பொருட்படுத்தாத, அசட்டடையான, எண்ணாமல் துணிகிற, துணிச்சலான, துடுக்கான, இடரைப் பொருட்படுத்தாத, விளைவுப்பற்றிக் கவலைப்படாத.
Recklessness
n. கவனமின்மை, முரட்டுத்தனம்.
Reckon
v. எண்ணு, எண்ணிக்கையைக் கண்டறி, அளவைக் கண்டறி, மதிப்பிடு, கணி, கணக்கிடு, எண்ணிப்பார், கணக்கிட்டு மொத்தம் பெறு, கணக்கில் சேர்த்துக்கொள், வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள்., வகையில் ஒன்றாகக் கருது, என்றுகருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென கருது, என்று கருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென நம்பு, ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள், நம்பு, நம்பியிரு, சார்ந்திரு, ஆதாரமாகக்கொள்.
Reckoner
n. கணக்கிடுபவர், கணக்கீட்டு வாய்ப்பாடு, கணிப்புச்சுவடி,.
Reckoning, n.,
எண்ணுதல், கணக்கிடுதல், கப்பலிருக்கும் இடத்தை மதிப்பிட்டறிதல், சாராயக்கடை விலைப்பட்டி, கணக்குத் தீர்த்தல், கணக்குத் தீர்ப்பு.
Reclaim
n. திருத்துநிலை, மீட்புநிலை, பண்படுத்தப்படும் தகுதி, (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா, மீட்டும் நன்னிலைப்படுத்து, தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து, காடு கெடுத்து நாடாக்கு, பண்படுத்து., நாகரிக நிலைக்குக் கொண்டுவா, சாகுபடியின் கீழ்க் கொண்டுவா, குற்ற நீக்கித் திருத்து, தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து, மீட்டுங்கோரு.
Reclaimable
a. பண்படுத்தத தக்க, சீர்திருத்தக் கூடிய, மறுபடியுங் கோரத்தக்க.
Reclamation
n. இயல்நிலை மீட்டல், நன்னிலை மீட்பு, மீட்கப்பட்ட நிலை, நிலச்சீர்த்திருத்தம், ஆக்க மேம்பாடு, ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு, மறுதிருத்த ஆக்கம், கைதிகளின் மறுசீராக்கம், மறு கோரிக்கையாளர் மனு, அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை.
Reclame
n. எப்படியும் தன்னை நாடறியச் செய்வித்துக் கொள்ளுங் கலைத்திறம்.
Reclinate
a. (தாவ) கீழ்நோக்கி வளைந்துள்ள.
Recline
v. சாய், சாய்ந்து கிடக்கும்படி செய், நன்கு சாய்ந்து படுத்து ஒய்வுகொள், பின்புறமாகச் சாய்ந்து கிட, ஒருக்கணித்துச் சாய்வாகப் பரத்திரு.
Reclothe
v. மீண்டும். உடை அணிவி, புதிதாக ஆடை அணிவி, புதிதாக மேற்கொள்ளுவி.
Recluse
n. ஆண்டி, துறவி, பெண்துறவி, ஒதுங்கி வாழ்பவர், தனித்து வாழ்பவர், தனிவாழ்வுப் பழக்கமுடையவர், (பெயரடை) ஒதுங்கியிருக்கும் பாங்குள்ள, தனித்து வாழ்கிற.
Recoal
v. கப்பல் முதலியவற்றில் மீண்டும் நிலக்கரி நிரப்பு, கப்பலுக்கு மீண்டும் நிலக்கரி வழக்கியுதவி.
Recog,nizant
நன்றியறிதலைக் காட்டிக்கொள்கிற, தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்கிற, ஏதேனுமொன்றை அறிந்திருக்கிற, எதேனுமொன்றை அறிந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிற.