English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reductio ad absurdum
n. விளைவுப் பொருத்தமின்மை காட்டி முடிவு தஹ்றென்று எண்பித்தல், (பே-வ) செயல்துறைக்கு ஒவ்வா அளவில் கொள்கை வலியுறுத்தல்.
Reduction
n. குறைப்பு, குறைபாடு, சுருக்கம், குறைவு, உருமாற்றம், எளிதாக்கம், படக்குறுக்கம்.
Reduit
n. கோட்டையின் சேம அகவரண் காப்பிடம்.
Redundance, redundancy
n. மிகை, நிறைவு.
Redundant
a. கழிமிகையான, தேவைக்கு மேற்பட்ட, மிகையுரையான, கூறியது கூறலான, நிறைந்த.
Reduplicate
v. இரண்டாக மடி, இரட்டு, (இலக்) சொல்லாக்கத்தில் முதல் எழுத்து அல்லது முழ்ல் அசையிரட்டுதல்.
Reduplication
n. இரட்டிப்பு, திரும்ப நிகழ்வு, இரட்டுறு நிகழ்வு, எதிர் படிவம், (இலக்) சொல்லாக்கத்தில் முதல் இரட்டிய பகுதி.
Reduplicative
a. (இலக்) சொல்லாக்கத்தில் முதல் எழுத்து அல்லது முதல் அசை இரட்டிப்புடைய, சொல்லாக்க இரட்டிப்புச்சார்ந்த, இரட்டிக்கும் போக்குடைய, இரட்டிப்பினாலான, திரும்ப நிகழும் இயல்புடைய.
Red-water
n. சிறுநீர்ச்-செந்நிறமாக்கும் முறைக்காய்ச்சல் தொடர்புடைய ஆடுமாடுகளின் நோய்வகை.
Red-wing
n. பாடும் பறவை வகை, பறவை வகை.
Ree
n. பறவை வகையின் பெண்.
Reebok
n. கூரிய கொம்புகளையுடைய தென் ஆப்பிரிக்க ஆட்டியல் மான்வகை.
Re-ech
v. ஒலி எதிலொலியாக முழங்கு, எதிரொலி முழக்கஞ் செய்.
Reed
n. நாணல் வகை, கொறுக்கை, கோரைப்புல், இசைக்கருவி அழுத்துகட்டை, துளை இசைக்கருவி வாய்க்கட்டை, சேணியர் அச்சுக்கோல், கூரை வேயும்படி பதப்படுத்தப்படும் கோதுமை வைக்கோல், (வினை) கோரைப்புல்லால் வேய், கூரை வேய்வதற்காகக் கோதுமை வைக்கோலைப் பதப்படுத்து, செதுக்கு வேலையில் நாணல் போன்ற வரி ஒப்பனை செய், துளை இசைக்கருவிகளில் வாய்க்கட்டை பொருத்து.
Reed-bunting
n. கருந்தலைப் பறவை வகை.
Reed-drawing
n. வாருகருவிமூலம் கோதுமை வைக்கோலை வெய் புல்லாக வாருதல்.
Reeded
a. நாணல் நிரம்பிய, நாணல் உடைய.