English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Red-lead
n. வங்க உயிரகை, செஞ்சாயத்துக்குப் பயன்படும் வங்கச் செந்தூரம்.
Red-legged
a. செங்காலுடைய.
Red-letter
a. நீடு நினைக்கத்தக்க, புகழ் விழாவாகக் கருதத்தக்க, செந்நிறத்திற் குறியிடப்பட்ட, (வினை) மகிழ்ச்சி விழாவாக ஆண்டுப் பட்டியிற் குறிப்பிடு.
Red-man, n.,
அமெரிக்க செவ்விந்தியர், பண்டை இரசவாதத்தில் செந்நிறப் பாதரசக் கந்தகை.
Redness
n. செந்நிறம், சிவப்பு.
Redolence, redolency
முனைப்பான மணம், இனிய வாசனை.
Redolent
a. முனைத்த மணமுடைய, தொடர்புண்மை நினைப்பூட்டுகிற.
Redouble
n. ஆற்றலிரட்டிப்பு, தொகைப்பெருக்கம், அளவுப் பெருக்கம், விசைப்பெருக்கம், சீட்டாட்டத்தில் இரட்டிப்பின் இரட்டிப்புக் கேள்வி, (வினை) இருமடியாக்கு, ஆற்றல் இரட்டி, தொகை பெருக்கு, உருப்பெருக்கு, அளவுபெருக்கு, விசைபெருக்கு, சீட்டாத்தில் இரட்டித்த கேள்வியின் இரட்டிப்புக் கேள்வி கேள்.
Redoubt
n. புற அரண், களக் காப்பரண்.
Redoubtable
a. கடுமிடல் வாய்ந்த, தோலாப் பேராற்றல் வாய்ந்த.
Redoubted
a. ஆற்றல் சான்ற, உருத்தக்க, அஞ்சுவருதோற்றமுடைய.
Redound
v. துள்ளிஎழு, இறுதியில் சென்று சேர், விளைவாக உதவு, பெரும் பங்காற்றி உதவு, நலம் பெருக்க உதவு, புகழ் பெருக்க உதவு, சென்று திரும்பு, உரியவரிடமே திரும்பி வந்துசேர், மல்ங்கிவந்து பயன்படு.
Redpoll
n. செஞ்சூட்டுடைய பறவைவகையின் சேவல், விதையடிக்கப்பட்டுச் செம்மயிர்போர்த்த கால்நடை.
Redredss
n. குறை தீர்வு, சீராக்கம், மாற்றீடு, (வினை) குறைவகையில் தீர்வுசெய், நேராக்கு, சீர்ப்படுத்து.
Redstart
n. செந்நிற வாலுடைய பாடும் பறவை வகை.
Red-tapist
n. விதியொழுங்குக் கடுமையர்.
Reduce
v. முன்னிலைக்குக் கொணர், மீட்டுக்கொணர், மறுபடியும் சீராக்கு, உருமாற்று, மாற்றி இசைவி, கட்டளை வடிவத்துக்குக்கொணர், வகுத்தமை, வகைப்படுத்து, வகையுட் கொணர், கட்டாயப்படுத்திச் செயற்படுத்து, அல்க்கி ஆள், குறை, தாழ்த்து, சுருக்கு, வறுமைக்கு ஆட்படுத்து, வலிமை குன்றுவி, எளிதாக்கு, சிக்கல் குறை, குறுக்கு, அளவு சிறிதாக்கு, எடையிற் குறைபடு.
Reduce font
சிறிய எழுத்து
Reducer
n. நிழற்பட மறிநிலைத் தகட்டின் செறிவு தளர்த்த உதவும் பொருள்.
Reducible
a. குறைக்கப்படத்தக்க.