English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Red
n. செந்நிறம், செந்நிறச் சாயல், கருஞ்சிவப்புக் கட்டிட மேசையில் செந்நிறப்பகுதி, மேடைக்கோற்பந்தாட்டத்தின் செந்நிறப்பந்து, கணக்காண்மை ஏட்டில் பற்றுப்பகுதி, செந்துகில், முற்காலப் பிரிட்டனின் மூன்று கடற்படைப் பிரிவுகளில் மூன்று கடற்படைப் பிரிவுகளில் ஒன்று, முனைப்புக்கட்சி, குடியரசுக்கட்சி, அரசிலிகட்சி, (பெயரடை) செந்நிறமான, அழல் நிறமான, குருதி நிறமான, குருதி தோய்ந்த, குருதிக்கொலை சார்ந்த, வெட்டுக்கொலைத் தொடர்புடைய, எரிப்பூட்டுச் செயல் தொடர்புடைய, பலாத்காரமான, புரட்சி சார்ந்த, முனைத்த அரசியல் போக்குடைய, பொதுவுடைமைக் கட்சிசார்ந்த, ருசியப் பொதுவுடைமை ஆட்சி சார்ந்த.
Red herring
n. செந்நிற மீன்வகை வாட்டு, புகைவாட்டுப் பதனமிடப்பட்ட மீன்வகை, வேட்டைநாய் மோப்பவழி தவறுவதற்காகக் குறுக்கே கொண்டுசெல்லப்படும் மீன்வாட்டு, வாத்திலிருந்து கவனந் திருப்பப் புகுத்தப்படும் ஆர்வச் செய்தி.
Red tapery, red-tapism
n. அலுவல் நடைமுறைக் கடுமை.
Redact
v. வௌதயீட்டு, வடிவில் பதிப்பி, முடிவான இலக்கிய உருக்கொடு, எழுத்தாண்மையில் முடிவான பாடம் உருவாக்கு, ஒழுங்குபடுத்து.
Redaction
n. வௌதயீட்டுக்கான உருவாக்கம், படித்திருத்தம், பாட ஒழுங்கு அமைப்பு, புதிய பதிப்பு.
Redan
n. இருமுகப்புக் கூம்புவடிவக் காவலரண்.
Red-band
n. அழுத்துகட்டைகளையுடைய இசைக்கருவித் தொகுதி.
Red-biddy
n. தேறலும் திரிபுற்ற வெறிய கலந்த குடி வகை.
Redblooded
a. செங்குருதி வாய்ந்த, உயிர்ப்பாற்றல் நிறைந்த, பண்படாத.
Red-book
n. செவ்வேடு, உயர்குடியினர் பெயாட்ப் பட்டியலேடு, பெருமக்கள், உயர்பணியாளர் பட்டியல்-பணிமனை விதிகள் அடங்கிய அரசியல் விவர ஏடு.
Red-box
n. அமைச்சரது செந்நிறப் பேழை.
Red-breast
n. நெஞ்சில் சிவப்புத் தடமுடைய பாடும் பறவை வகை.
Red-brick
a. பல்கலைக்கழகக் கட்டிடவகையில் தற்காலப்பாணியிலமைந்த கட்டுமானக் கடைகாலுடைய.
Red-bud
n. இலைகளுக்கு முன் பூக்குஞ் செங்கழுநீர் நிறப் பூ மரவகை.
Redcap
n. படைத்துறைக் காவல் துறைவர், ஸ்காத்லாந்து நாட்டு அரண்மாளிகைப் பேய்.
Redcoat
n. பிரிட்டன் நாட்டுப் படைவீரன்.
Red-cowl
n. ஸ்காத்லாந்து நாட்டு அரண்மாளிகைப் பேய், காவற்றுறை ஆள்.
Red-currant
n. புதர்வகையின் கொட்டையுள்ள செந்நிறக் கனி.
Redden
v. சிவப்பாக்கு, சிவப்பாகு,
Reddish
n. சற்றே சிவப்பான.