English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Recreational
a. பொழுதுபோக்குச் சார்ந்த.
Recreative
a. பொகுதுபோக்க உதவுகிற, மகிழ்வளிக்கிற, நேரப்போக்கான.
Recrement
n. குருதியிலிருந்து பிரிந்து மீட்டும் வந்து சேரும் நீர்மம், சவறு, மெத்தை.
Recretion
n. ஓய்வுநேர இன்பப் பொழுதுபோக்கு, அயர்வகற்றும் இன்பம், இன்பக்கேளிக்கை, இன்ப விளையாட்டு.
Recriminate
v. எதிர்க்குற்றச்சாட்டுச் செய், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்து கொள்க.
Recrimination
n. எதிர்க்குற்றச்சாட்டுச் செய், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுச் செய்துகொள்க.
Recriminative, recriminatroy
a. எதிர்க் குற்றச்சாட்டான.
Recrudescence, recrudescency
n. திரும்பத் தோற்றுதல்.
Recrudescent
a. மீட்டுங் கிளர்ந்தெழுகிற.
Recruit
n. புதுப்படைவீரர், படைத்துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பயிற்சி பெறாத ஆள், புதிதாகச் சேர்ந்தவர், புத்தாள், திறமையற்றவர், (வினை) படைக்குப் புதிதாகச் சேர், புது ஆளாக எடு, படைக்குப் புதிய ஆளெடுப்புச்செய், குறைபாடு, நிரம்பு, குறைபாடு நிரப்பு, இழப்புச் சரிசெய், இழந்த நலம் பெறுவி, ஊக்கமூட்டு, புதுவலிமையூட்டு, புத்தூக்கம் பெறு, மீட்டுப்பெறு.
Rectal
a. குதத்துக்குரிய, குத வழியான.
Rectangle
n. நாற்கட்ட வடிவம், நீள் சதுரம்.
Rectangular
a. நாற்கட்ட வடிவான, நாற்கட்டக் கூறுடைய, செங்கோணப் பாங்கான, செங்கோண அமைப்புடைய.
Rectification
n. தவறு நீக்கம், திருத்தம், வடிகட்டுத் தூய்மைப்பெருக்கம்.
Rectifier
n. சரி செய்பவர், திருத்துபவர், வெறியம் துப்புரவு செய்பவர், துப்புரவு செய்யுங்கருவி, மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி.
Rectify
v. திருத்தியமை, சரியாக்கு, சீர்திருத்தஞ் செய், சரிசெய், மாற்றித்திருத்து, பிழைநீக்கு, தவறு சரிசெய், தீங்குக்ள அகற்றிச் சரிசெய், விடுபட்டதை நிரப்பு, மீண்டும் மீண்டும் வடிகட்டித் தூய்மைபெருக்கு,. வளைவு முதலியவற்றின் வகையில் சரிசம நீள நேர்வரை காண்.
Rectilineal, rectilinear
a. நேரான, நேர்கோடான, நேர்கோடாய் அமைகிற, நேர்கோடுகளால் ஆன, நேர்கோடுகளைப் பக்கங்களாகவுடைய.
Rectilinearity.
n. நேர்கோட்டியல்பு.
Rectitude
n. நேர்மை, நடுநிலை பிறழாமை, ஆன்மிக உறுதி.
Recto
n. திறந்த ஏட்டின் வலப்பக்கம், தாளின் முன்பனக்கம்.