English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Refection
n. சிற்றுண்டி, உணவாகவோ பானமாகவோ உஞ்ள்ள சிற்றுண், சிற்றுணா, இலோசான உணவு.
Refectory
n. துறவிமட உணவுக்கூடம்.
Refer
v. குறிப்பிடு, சுட்டு, குறித்துப்பேசு, எடுத்துப்பார் வேண்டும்போது உதவிநாடு, பற்றியதாயிரு, தொடர்புடையதாயிரு, உரியதாக்கு, உரியதாகச் சுட்டு, குறித்தொதுக்கு, தொடர்புடையதாகக் கருது, தொடர்புடையதாக இணைக்கக் கருது, தொடர்புபடுத்து, பொருட்படுத்து, உரிய விளைவாகச் சுட்டு, காரண காரியத் தொடர்புடையதாகக் கருது, மூலமாகக் குறிப்பிடு, கலந்தாராய், கலந்தாய்வுத் தொடர்பு கொள், நாடி ஆய்வுரை கோரு, தகவல் நாடிச்சென்று கேள், நாடி அணுகு, வேண்டு, கோரிக்கைவிடு, சென்று உதவி கோரு, ஆற்றுப்படுத்து, தகவல்பெற அனுப்பு, பார்க்கும்படி ஏவு, மேவுவி, ஆய்வுரைக்காக அனுப்பு, மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு, தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு, ஆதாரமாகக்காட்டு, பிணை வகையில் சுட்டிக்காட்டு, பிணைபெற அனுப்பு, ஒப்புவி, ஒப்படை.
Referable
a. மூலமாகக் குறிப்பிடத்தக்க, குறித்துக் கலந்தாய்வதற்குதரிய, கலந்தாய்வுக்கு அனுப்பப்படத்தக்க, கலந்தாய்வுக்கு அணுகத்தக்க, ஒதுக்கப்படத்தக்க.
Referee
n. ஆட்ட நடுவர், ஆட்டக்காரணிகர், (வினை) நடுவராகச் செயலாற்று.
Reference
n. தொடர்பு, உறவு, பொருத்தம், குறிப்பீடு, குறிப்புரை, சுட்டுரை, சுட்டுக்குறிப்பு, சுட்டுக்குறியீடு, புரட்டரவு, தேவை நோக்கீடு, தேட்டத் தேர்வு, தகவல் தேட்டம், குறிப்புத்தேட்டம், தகவல் குறிப்புக் கோரிக்கை, துணையாதாரம், மேற்கோள், சான்றாதாரம், பிணை ஏற்பாதரவு, சான்றாதரவு, பரிந்துரைப்பு, மேவுவிப்பு, தகவலுக்கான ஒப்புவிப்பு, முடிவுக்கான ஒப்படைப்பு, பணியாணை உரிமையெல்லை, (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
Referendum
n. பொதுமக்கள் வாக்கெடுப்பு, தனி ஒரு செய்தியில் தேர்தலுக்குரிய மக்கள் தொகுதியினர் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவு செய்யும் குடியொப்பமுறை.
Referential
a. சுட்டு அல்லது மேற்கோள் அடங்கிய, வேறொன்றினைச் சுட்டுகிற அல்லது குறிப்பிடுகிற.
Reffian
n. முரடன், கொடியஹ்ன், போக்கிரி, சட்டத்திற்கு முரணாகக் குழப்பம் விளைவிப்பவன்.
Refill
-1 n. மறு நிரப்பீடு, மறு நிரப்பீட்டுச் சேமத்தங்கற் பொருள், வெடிமருந்தின் மறுசெறிவு, வெடிமருந்தின் மறு அடைப்பளவு.
Refill
-2 v. மீண்டும் நிரப்பு, வெடிமருந்தினை மீண்டும் நிறை.
Refine
v. மாசகற்று, துப்புரவு செய், தௌதவாக்கு, அழகியதாக்கு, நேரிதாக்கு, பண்பு மேம்படுத்து, நாகரிகமுடையதாக்கு, சுவைநுட்பமூட்டு, ஒழுகலாறுகளைப் பண்படுத்து, புறத்தோற்றத்துக்கு மெருகிடு, தூய்மையாகு, தௌதவுபடு, நாகரிக நடத்தைவளரப்பெற, மென்மைநயம் மிகுதியாகப் பெறு, மொழிவகையிற் செப்பஞ் செய், கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு, நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து, நுட்பமான வேறுபாடுகள் செய், மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Refined
a. துப்புரவாக்கப்பட்ட, செப்பஞ் செய்யப்பட்ட, பண்பட்ட.
Refinedly
adv. நயநாகரிகமாக, வனப்புடையரென்று நிலை மேற்கொண்டு.
Refinement
n. தூய்மைப்பாடு, துப்புரவாக்கப்பட்டட நிலை, கருத்து நுட்பம், சுவை நேர்த்தி, மெருகேறிய ஒழுகலாறு, நுண்ணிய திறங்காட்டும் நிலை, திறமைமிக்க வேலைப்பாடு, நுணுக்க விரிவாக வகுத்தமைக்கப்பட்ட வேலைப்பாடு, நுட்பமான ஆய்வாராய்வுப்பண்பு, நுண்ணய வேறுபாட்டுத் திறம்.
Refiner
n. செம்மைப்படுத்துவபவர், தூய்மையாக்குபவர், வாக்குபவர், சர்க்கரை-உலோகம் முதலிய வற்றைத் தூய்மைப்படுத்தும் தொழில் மேற்கொண்டவர்.
Refit
n. செப்பநிலைச் சீர்திருத்தம், (வினை) கப்பலை மீண்டும் நன்னிடலைப்படுத்தும் வகையில் சீர்திருத்து, கபப்ல் வகையில் மீட்டும் பயன்படும்படி சீர்திருத்தம் பெறு.
Refitment
n. கப்பலின் செப்பநிலைத்திருத்தம்.
Reflation
n. பொருளியல் மறுவீக்கம், நாணய மதிப்பின் மீட்டுயர்வு.