English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reform
-1 n. சீர்திருத்தம், நலமேம்பாடு, சீரமைவு, மாற்றியமைத்தல், சீர்ப்பாடு, அரசியற் குறைநீக்கம், ஊழல் நிக்கம், சீராக்கம், சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை, சீர்மை, சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல், (
Reform
-2 v. மீண்டும் உருவாக்கு, மீண்டும் உருவாகு.
Reformation
-1 n. ரோமன் திருச்சபையிலிருந்த குறைபாடுகளை நீக்குவதற்காக 16-ஆம் நுற்றாண்டில் நடந்த கிறித்தவ சமயச் சீர்திருத்த இயக்கம்.
Reformation
-2 n. சீர்திருத்துதல்,. சீர்திருத்துதல், சீர் திருத்தம், அரசியல்-சமய-சமுதாயத்துறைகளில் நல்லாக்கம் நோக்கிய அடிப்படை மாறுதல்.
Re-formation
-3 n. மீட்டும் வகுத்தமைத்தல், மறுசீராக்கம், மீட்டுருவாதல்.
Reformative
a. சீர்திருத்தும் பாங்குள்ள, சீர்ப்படுத்து வகையே நோக்கமாகக் கொண்ட.
Reformatroy
n. இளைஞர் சீர்திருத்தச்சாலை, இளங்குற்றவாளிகளின் சீர்திருத்தப்பள்ளி, (பெயரடை) சீர்திருத்தும் பாங்குள்ள, சீர்ப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட.
Reformed,a.
திருந்திய, சீர்திருத்தநெறி சார்ந்த.
Reformer
n. சீர்திருத்தாளர், சீர்திருத்தவாதி, 16-ஆம் நுற்றாண்டில் நடந்த சமயச் சீர்திருத்த இயக்கதலைவர், 1க்ஷ்31-2ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச்சட்ட வரைவினை ஆதரித்தவர்.
Refract
v. கோட்டமுறு, கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடக மாற்றங்களால் ஔதக்கதிர்ச் சாய்வு மாறுபாடு, கதிர் சித்ர்வுறு, கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு, (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய்.
Refracting
a. ஔதக்கதிர்க்கோட்டமுடைய, கதிர்ச்சிதர்வுடைய.
Refraction
n. வக்கரிப்பு, கதிர்க்கோட்டம், கதிர்ச்சிதர்வு.
Refractive
a. ஔதக்கதிடிர் விலக்கஞ் செய்கிற, ஔதக்கதிர்க் கோட்டஞ் சார்ந்த.
Refractor
n. ஔதக்கதிர்க்கோட்டம் உறுவிக்கும் பொருள், கதிர்க்கோட்டத் தொலைநோக்காடி.
Refractory
n. உயர்வெப்பு ஏற்கும் பொருள், (பெயரடை) படிமானமறற், ஒத்திசைவற்ற, எதற்கும் மசியாத, வசப்படுத்தமுடியாத, முரண்டுபிடிக்கிற, கலாம் விளைக்கிற, பண்டுவத்துக்கு ஒத்துவராத, பொருள்கள் வகையில் உருக்கமுடியாத, வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத.
Refrain
-1 n. பல்லவி, பாடலின் கடைமடக்குவரி.
Refrain
-2 v. தன்னை அடக்கிக்கொள், செயல்வகையில் தவரி, விலக்கியமைவுறு.
Refrangibility
n. வக்கரிப்புத்தன்மை, கதிர்விலகு நீர்மை.
Refrangible
a. கதிர்க்கோட்டமுறுவிக்கத்தக்க.
Refresh
v. புதுக்கிளர்ச்சியூட்டு, புதுவலுவூட்டு, புத்துயிர்ப்பூட்டு, சிற்றுணா அருந்து, சிறுபானம் பருகுவி, ஓய்வுமூலம் புத்தாக்கம் அளி, நினைவாற்றலைக் கிளறிவிடு, அனலைக் கிளர்ந்தெழச் செய், மின்னாற்றலுக்குப் புது ஆக்கம் அளி, சிற்றுண்டி அருந்து, ஊக்கந்தருஞ் சிறுகுடி பருகு.