English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sextant
n. கப்பலோட்டியின் கோணமானி, நிலப்பரப்பாய்வுக் கோணளவுகருவி, வட்டத்தின் ஆறில் ஒரு பகுதி.
Sextet, sextette
(இசை.) அறுகுரலிசைப்புத் தொகுதி, (இசை.) ஆறுபாடகர் குழு, (இசை.) ஆறு இசைக்கருவிக்கோப்பு, (இசை.) ஆறு இசைக்கருவியாளர்கள் கூட்டணி, ஆறன் தொகுதி, அறுவர் தொகுதி.
Sexto
n. அறுமடி ஏடு, தாள்களை ஆறாய் மடிப்பதால் ஏற்படும் புத்தகம்.
Sextodecimo
n. பதினாறன் மடியேடு, தாள்கள் பதினாறாய் மடிக்கப்பட்ட புத்தகம், பதினாறன் மடிப்புத்தாள், பதினாறன் மடிப்புமுறை.
Sexton
n. திருக்கோயில் மணிப்பணியாள், ஆடையணி திருக்கலக் காப்பும் புதைகுழி மேற்பார்வையும் உடைய திருக்கோயில் அலுவலர்.
Sexton-bettle
n. முட்டைக்காக இறந்த விலங்குடல் சேமிக்கும் வண்டு வகை.
Sextuple
n. ஆறுமடங்கு, ஆறுமடங்குத்தொகை, (பெ.) ஆறுமடங்கான, (வினை.) ஆறுமடங்காக்கு, ஆறால் பெருக்கு, அறுமடங்காகு.
Sextus
n. ஆண்பள்ளி வழக்கில் ஒரே பெயருடைய பலரின் பெயரடை மரபில் ஆறாமவன்.
Sexual
a. பால் வேறுபாடு சார்ந்த, பால்களுக்குரிய, (தாவ.) வகை திரிபமைப்பு வகையில் பால் வேறுபாடு அடிப்படையாக வகுத்தமைக்கப்பட்ட.
Sexualism
n. பாலழுத்தம், பால்வகைக்கவனம்.
Sexualist
n. பால்வகைச் செய்தி ஆர்வலர், (தாவ.) வகை அமைப்பில் பால் வேறுபாட்டுமுறையைப் பின்பற்றுபவர்.
Sexuality
n. பாற்றன்மை, ஆண்பெண்பாற் பண்பு.
Sexualize
v. பாற்றன்மையூட்டு, பால்தன்மையுடையதாகக் குறிப்பிடு, பாற்பண்புடையதாகக் கருது.
Sexually
adv. பாற்றன்மைச் சார்பாக.
Seym
n. போலந்துநாட்டு மாமன்றம்.
Sfety-bolt
n. துப்பாக்கி விசைப் பூட்டமைவு.
Sfety-lock
n. எளிதில் திறக்க முடியாத பூட்டு, துப்பாக்கிகள் தற்செயலாக வெடிக்காதபடி இருப்பதற்கான காப்பமைவு.
Sforzando
adv. இசை இயக்கக் கட்டளை மரபில் அழுத்தத்துடன்.
Sfumato
a. ஒவிய வகையில் தௌதவற்ற புறக்கோடுடைய.
Shabby
a. அருவருப்புத் தருகிற, அலங்கோலமான, நைந்து கிழிந்த, கந்தலடைந்த, தாறுமாறாகக் கிடக்கிற, பஞ்சடைந்த தோற்றமுடைய, படுமோச நிலையிலுள்ள, அருவருப்பான நடத்தையுடைய, மிகப் பழுதுபட்ட, இடிந்து தகர்ந்த, பாழடைந்த, மானக்கேடான, பஞ்சையான, உலோபித்தனம் வாய்ந்த, கீழ்த்தரமான, கயவாளித்தனமான, இழிதக்க, கேவலமான, அற்பத்தனமான.