English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sidewise
a. பக்கமான, பக்கம்நோக்கிய (வினையடை.) ஒருபக்கத்தில், ஒருபக்கம் நோக்கி.
Sidi, sidi-boy
ஆப்பிரிக்கன், நீகிரோ.
Siding
n. புடையிணை பாட்டை, வண்டிகளைத் திசை திருப்புவதற்காக இருப்புப்பாதைக்குப் பக்கமாகப் போடப்பட்ட சிறிய பக்க இருப்புப்பாதை, ஒதுங்குபாட்டை, ஓடாத புகைவண்டி ஒதுங்கி நிற்பதற்கான பக்கத் தண்டவாளம், ஒரு தலை ஆதரவு, துணை ஆதரவு, (பெ.) ஒரு பக்க ஆதரவான, துணை ஆதரவான.
Sidle
v. அஞ்சியொதுங்க, ஒருபக்கமாகப் பின்னிடை, பக்கவாட்டாகச் சாய்வுறு.
Sidonian
n. சைடன் நகரத்தவர், (பெ.) சைடன் நகரஞ் சார்ந்த.
Siege
n. முற்றுகை, சுற்றிவளைப்பு, முற்றுகைக்காலம், முற்றுகையீடு, முற்றுகைக்கு ஆட்படுதல், ஆள்வகையில் சுற்றி மொய்ப்பு, கருத்து நெருக்கீடு, தங்கருத்துக்குக் கொண்டு வரும் வன்முறை நெருக்கு முஸ்ற்சி, (வினை.) முற்றுகையிடு.
Siege-basket
n. அரண் கட்டுமானப் பாளச் சட்டம், அரண்கட்டுதலில் அல்லது பொறியமைத்தலில் மண்ணால் நிறைக்கப்பட்ட பிரம்பால் அல்லது உலோகப் பட்டைகளாலான நீள் உருளைச்சட்டம்.
Siege-gun
n. நிலப்பீரங்கி, பாரச் சுடுகலம்.
Siege-train
n. முற்றுகைச் சாதனத் தொகுதி, முற்றுகைக் கான பீரங்கி முதலியவற்றின் தொகுதி.
Siege-works
n. pl. முற்றுகைப்பாடுகள், காப்பரண்-மறைகுழி முதலியவற்றின் தொகுதி.
Siegfried line
n. இரண்டாம் உலகப்போரில் பிரஞ்சு எல்லையோரச் செர்மண் அரண்வரிசை.
Sienese
n. சீயெனா நகரத்தவர், (பெ.) சீயெணா நகரத்தைச் சார்ந்த.
Sienna
n. சீயெனா மண், சாயப்பொருள் தரும் காவிக் களி மண்வகை.
Sierra
n. வாட்பாறை மலை, வாட்போலக் கரடுமுரடாக அமைந்த மலைவகை.
Siesta
n. நண்பகல் குறுந்துயில்.
Sieve
n. சல்லடை, சலித்துப் பிரிக்கும் கருவி, அரிதட்டு, அளவு வரிகூடை, வரிகூடை அளவு, ஓட்டைவாயர், மறைகாவாது வௌதயிடும் இயல்பினர், (வினை.) சல்லடையிலிட்டுச்சலி, அரிதட்டிட்டு அரி.
Sifficiently
adv. போதிய அளவில் தாராளமாக.
Siffix
-1 n. விகுதி, பின்னொட்டாய்ச் சேர்ந்த சொல்லறுப்பு, பின்னொட்டு, பிற்கூறு.
Siffix
-2 v. விகுதி சேர், சொல்லமைப்பில் பின்னொட்டுச் சேர், பின்னிணை, பின்னொட்டு.
Siffleur
n. சீழ்க்கைக் கலைஞர்.