English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Signboard
n. விளம்பரப் பலகை.
Signet
n. தனிமுத்திரை, கையொப்ப இணைகுறி முத்திரை.
Signet-ring
n. முத்திரை மோதிரம், பொறிப்புக்கணையாழி.
Significance
n. தனிமுறைச் சிறப்பு, உட்பொருள், தனிவிளைவு வளக்கூறு, உட்கருத்து, குறிப்பு நுட்பம்.
Significant
a. குறிப்பிடத்தக்க, தனிப்படக் கவனிப்பதற்குரி, புறக்கணித்துவிடத் தகாத, தனிச்சிறப்பு வாய்ந்த, உள்ளார்ந்த சிறப்புடைய, விளைவுவளக் கூறுடைய, உட்கருத்துவளஞ் செறிந்த, குறிப்புவனஞ்சான்ற, உட்பொருளார்ந்த.
Significantly
adv. குறிப்பிடத்தக்க வகையில், தனிக்குறிப்புடன், தனிக்கவனிப்பிற்குரிய முறையில.
Signification
n. தனிப்பொருள், பொருள்நுட்பம், உட்குறிப்பு, உட்பொருள், தனிக்குறிப்பீடு.
Significative
a. தனிக்குறிப்புடைய, தனிப்பொருட் சுட்டுடைய, குறிப்பு வளஞ்சான்ற, தனிச்சிறப்புடைய.
Signify
v. குறித்துக்காட்டு, அடையாளமாய் அமை, தனிச்சின்னமாய் அமை, பின்விளைவு காட்டு, பயன்வளமுடையதாயிரு, விளைவுவளக் கூறுடையதாய் அமை, பெருள்படு, கருப்பொருளுடையதாயிரு, உட்குறிப்புடையதாயிரு, தனிக்கருத்துப் புலப்படுத்து, படிப்பினை வழங்கு, தனிச்சிறப்புடையதாயிரு, குறிப்பிடத்தக்கதாய் அமை, கவனிப்பிற்குரியதாயிரு, புறக்கணிக்கத்தகாததாயிரு, தெரிவி, அறிவி.
Signor, signore
திரு., இத்தாலிய வழக்கில் மணமான ஆடவர்பெயர் முன்னடைச்சுட்டுக்குறிப்பு, திருவுடையாள், நன்மகள்.
Signora
n. திருவாட்டி, இத்தாலிய வழக்கில் மணமான பெண்டிர் பெயர் முன்னடைச்சுட்டுக் குறிப்பு, திருவுடையாள், நன்மகள்.
Signorina
n. செல்வி, திருநிறைசெல்வி, இத்தாலிய வழக்கில் மணமாகாத பெண்பெயர் முன்னடைச்சுட்டுக் குறிப்பு, நங்கை, இளம்பெண்.
Sign-painter
n. விளம்பரப்பலகை ஓவியர்.
Sign-posf
n. கைகாட்டி, வழிகாட்டிமரம், தெருப்பெயர்ப்பலகை.
Sign-writer
n. விளம்பரப் பலகை எழுத்தோவியர்.
Sikh
n. சீக்கியர், பஞ்சாபிலுள்ள சீக்கிய இனத்தவர், சீக்கிய சமயத்தவர், சீக்கிய வீரர், (பெ.) சீக்கிய இனஞ் சார்ந்த, சீக்கிய சமயஞ் சார்ந்த.
Sikhism
n. சீக்கிய சமயம், பஞ்சாபில் குருநானக் (146ஹீ-153க்ஷ்) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயம்.
Silage
n. வளிகாப்புப் பதனமுறை, பசுந்தீவனத்தின் கால்புகாக் குழிபதன அல்லது பேழைப்பதன முறை, (வினை, ) தீவன வகையில் கால்புகாக் குழிபதனஞ்செய், பசும்புல் வகையில் வளிபுகாப் பேழைப்பதனஞ் செய், பதனக்குழியிலிடு, பதனப்பேழையிலிடு.
Silence
n. அரவமின்மை, மோனம், சந்தடியின்மை, வாளாமை, வாய்விடா அமைதி, பேசாமை, வாயாடாமை, செய்தி வௌதயிடாமை, மெய்ம்மை வகையில் வாயடக்கம், மறைகாப்பமைதி, (வினை.) ஓசையமர்த்து, வாயடங்கச் செய், பேச்சடங்கு, பேசாதிருக்கச் செய், விவாதத்தில் எதிராளியை அடக்கிவிடு, எதிர்வாதத்திற்கு இடமில்லாமற் செய்துவிடு, எதிரி துப்பாக்கி-பீரங்கி முதலியவற்றின் வகையில் செயல்படாததாக்கு.
Silenced
a. வாயடக்கப்பட்ட, செயலற்ற நிலைப்படுத்தப்பட்ட.