English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Silk-cotton
n. இலவு, இலவம்பஞ்சுமரம், இலவம்பஞ்சு.
Silken
a. பட்டாலான, பட்டுப்போன்ற, மென்னயமான, பட்டொளமி வீசுகிற, இன்னயமிக்க, இன்பசப்பான.
Silk-fowl
n. பட்டியல் இறகுடைய பறவை வகை.
Silk-gland
n. பட்டுப்புழுவின் பட்டுநீர்மச் சுரப்பி.
Silkiness
n. பட்டுப்போன்ற பண்பு, மென்பட்டியல்பு.
Silk-reel
n. பட்டுநுல் திரிவட்டு.
Silkworm
n. பட்டுப்பூச்சி.
Silky
a. பட்டுப்போன்ற, மெல்லிழைவான, இன்னழகு வாய்ந்த, மென்னய நேர்த்தியுடைய.
Sill
n. பலகணிப்படிக்கல், பலகணிப் படிக்கட்டை, வாயிற் படிக்கல், வாயிற்படிக்கட்டை, கப்பல் கட்டுத்துறை வாயில் அடித்தளக்கட்டு.
Sillabub
n. பாற் பாசடை, பாலேடு-தேறல்-பசைமங்கலந்த கூழமுதுணவு.
Sillily
adv. மடத்தனமாக, சிறுபிள்ளைத்தனமாக, அறிவற்று, சூதுவாது தெரியநிலை காரணமாக.
Silliness
n. மடமை, முதிரறிவின்மை, அறிவுக்குறை, மன உரமின்மை, சிறுபிள்ளைத்தனம், சூதுவாதறியாத் தன்மை, கேடற்ற சிறுமை, அற்பத்தனம், இரங்கத்தக்க நிலை, கரவின்மை.
Silly
n. மட்டி, மடவோர், கேடிலி, (பெ.) மடமை வாய்ந்த, சூதுவாதறியாத, சிறுபிள்ளைத்தனமான, முதிரறிவற்ற, மன உரமற்ற, அற்பத்தனமான, கள்ளமற்ற, கரவில்லாத, அறிவற்ற, இரங்கத்தக்க, கேலியான, மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரருக்கு மிக நெருங்கிய.
Silo
n. பசுந்தீவனப் பதனக்குழி, வளிபுகாப் பசும்பல் பதனப் பேழை, (வினை.) பசும்புல்லைப் பதனக்குழியிலிடு, பசுந்தீவனத்தைப் பதனப் பேழையிலிட்டு வை.
Silt
n. வண்டல், சேற்றுப்படிவு, (வினை.) வண்டலிடு, சேறாகப் படிவுறு, வண்டலிட்டடை.
Silubility
n. கரையுந்தன்மை.
Silurian
n. பண்டைப் பிரிட்டனின் பழங்குடி வகையினர், (பெ.) (மண்.) தொல்லுயிரூழியில் மீன்பருவத்திற்கு முந்திய கூறு சார்ந்த, தண்டிலிப் பருவத்தின் கடைக்கூற்றினுக்குரிய.
Silvan
a. முல்லைத்திணைக்குரிய, காட்டுநிலஞ் சார்ந்த, காட்டுக்கரிய, காடுநிறைந்த, காட்டுப்புறஞ் சார்ந்த, நாட்டுப்புற வாழ்விற்குரிய.
Silver
n. வௌளி, வௌளிப்பணம், வௌளி நாணயம், வௌளிக்கலம், வௌளிக்கலத்தொகுதி, வௌளித்தட்டம், வௌளிநகை, வௌளி அணிமணித்தொகுதி, வௌளிப்பாளம், வௌளிக்கலவை, வௌளிப்பூசுக்கலவை, நிழற்படத்தாளைப் பதப்படுத்தும் வௌளி உப்பு, (பெ.) வௌளியாலான, தலை முதன்மைக்கடுத்த, தலைமைச் சிறப்பிற்கு ஒருபடி மட்டுமே குறைந்தபடியான, (வினை.) வௌளிப்பூச்சிடு, வௌளித்தகடு பொதி, நிலைக்கண்ணாடிக்குப் பாதரசப்பூச்சிடு, வௌளித்தோற்றங் கொடு, வௌளிய பளபளப்புநிறம் அளி, நரைக்கச் செய், வௌளிதாக்கு, நரை, வௌளிதாகு, வௌளிபோன்றதாக்கு, வௌளிபோன்றதாகு.